டம்மி சி.எம் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகிய பயிர்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாகிவிட்டது. திமுக, அதிமுகவின் 50 ஆண்டு திராவிட ஆட்சிக்கு முடிவு கட்டி தவெக அரியணையில் ஏறியது. மக்கள் பல்வேறு மாற்றங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி என்று தவெக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. சொன்னபடி செய்யவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க மறுப்பதால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டம்மி முதலமைச்சரின் விளம்பர வெளியால் டெல்டாவில் பயிர்கள் கருகுவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "டம்மி சி.எம்மின் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும். இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.

udhayanidhi-stalin-slams-vijay-over-delta-farmers-issue

சர்கஸ் அரசுக்கு எச்சரிக்கை

சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த டம்மி முதலமைச்சர் ரீல்ஸ் வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று தண்ணீர் திறந்துவிட்டார். அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன. இந்த நிலை ஏற்படக்கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும், அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த சர்கஸ் அரசை எச்சரித்தோம்.

வறட்சி நிவாரணம்

ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி ஈகோவால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள். ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் கவலையில் கன்டென்ட் தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+