அரசு ஊழியர்களுக்கு ‘ஜாக்பாட்'.. சம்பள ‘அட்வான்ஸ்' தொகையை ரூ.50,000 ஆக உயர்த்தி அறிவித்த முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து 'அட்வான்ஸ்' தொகை பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த 'அட்வான்ஸ்' தொகைக்கான 'லிமிட்' ரூ.25 ஆயிரமாக இருந்த நிலையில் அதன் வரம்பு தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளார் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார். இந்த திட்டம் பற்றிய முழு விவரம் வருமாறு:

karnataka-government-employees-festival-advance-increase-from-rs-25-000-to-rs-50-000
Photo Credit:

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் ஹியூரில் தாலுகாக அரசு ஊழியர்களின் மாநாடு மற்றும் கன்னட ராஜ்யோத்சவா விருது வழங்கும் விழா நடந்தது.

இதில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் அரசு ஊழியர்களுக்கு 2 முக்கிய செய்திகளை கூறினார். இதுதொடர்பாக டிகே சிவக்குமார் கூறியதாவது:

''கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் பண்டிகை காலத்தில் தங்களின் சம்பளத்தில் இருந்து முன்பணமாக (அட்வான்ஸ்) ரூ.25 ஆயிரம் வரை பெற முடியும். இது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் விருப்பமாக உள்ளது.

உண்மையில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி கவலை கொள்ள தேவையில்லை. இதுதொடர்பாக நிதித்துறை, அமைச்சரவை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர் சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டு இதுதொடர்பான உரிய அறிவிப்பை நேரம் வரும்போது அறிவிப்போம்'' என்றார்.

முதல்வர் டிகே சிவக்குமாரின் இந்த அறிவிப்பால் கர்நாடகா அரசு ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர். கர்நாடகாவை எடுத்து கொண்டால் பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து முன்பணம் பெறலாம். பண்டிகையை சிறப்பாக கொண்டாட வசதியாக இந்த திட்டம் உள்ளது.

இந்த திட்டத்தில் அரசு ஊழியர் ஆண்டுக்கு ஏதாவது ஒரு பண்டிகைக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் பணத்தை சம்பளத்தில் அட்வான்ஸ் தொகையாக பெற முடியும். எந்த பண்டிகையின்போது அட்வான்ஸ் தொகை வேண்டுமோ அதற்கு 15 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்தால் முன்பணம் கிடைத்துவிடும்.

அதன்பிறகு அடுத்த 10 மாதத்தில் இந்த தொகையை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து அரசு பிடித்து கொள்ளும். இதற்கு வட்டி எதுவும் கிடையாது. இப்போது இந்த அட்வான்ஸ் தொகை தான் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி டிகே சிவக்குமார் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+