Indian Railways தண்டவாளங்கள் துருப்பிடிக்காமல் பளபளப்பாக இருப்பது எப்படி? ஆச்சரிய உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.. ஆனால், அவர்கள் பயணம் செய்யும் ரயில் தண்டவாளங்கள் பற்றிய ஒரு விஷயத்தை நிறைய பேர் கவனித்திருக்க மாட்டார்கள். வெயில், மழை என எல்லா காலநிலையிலும் இருக்கும் இரும்புப் பொருட்கள் நாளடைவில் துருப்பிடிக்கும். அப்படியிருக்கும்போது, தினமும் பல டன் எடையுள்ள ரயில்கள் ஓடும் தண்டவாளங்கள் மட்டும் ஏன் அவ்வளவாக துருப்பிடிப்பதில்லை? இதற்கு பின்னால் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவைகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

சாதாரணமாக இரும்புப் பொருட்கள் மழை, ஈரப்பதம் போன்றவற்றால் துருப்பிடிக்கும்... ஆனால், ரயில் தண்டவாளங்களில் அப்படி துரு அதிகமாக தெரிவதில்லை. இதற்கு அவை தயாரிக்கப்படும் விதமும், ரயில்கள் தொடர்ந்து ஓடுவதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

Indian Railways Railway Track Facts Railway Track Maintenance

ரயில் தண்டவாளங்கள்

ரயில் தண்டவாளங்கள் சாதாரண இரும்பால் தயாரிக்கப்படுவதில்லை. அதிக வலிமை கொண்ட சிறப்பு எஃகைப் பயன்படுத்தித்தான் தயாரிக்கிறார்கள். இதில் கார்பன், மாங்கனீசு போன்ற பொருட்கள் குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்படுகின்றன. இதனால் தண்டவாளங்கள் அதிக எடையைத் தாங்கும் வலிமை பெறுகின்றன. நீண்ட காலம் தேய்மானத்தைத் தாங்கும் தன்மையும் கிடைக்கிறது.

ரயில் சக்கரங்கள்

இன்னொரு முக்கியமான காரணம் ரயில் சக்கரங்கள். ரயில்கள் தொடர்ந்து தண்டவாளங்களின் மீது ஓடும்போது, சக்கரங்களுக்கும் தண்டவாளங்களுக்கும் இடையே உராய்வு ஏற்படுகிறது. இதனால் தண்டவாளத்தின் மேற்பரப்பில் படியும் துரு தேய்ந்து நீங்குகிறது. இதுவும் தண்டவாளங்களில் துரு அதிகமாகத் தெரிவதைத் தடுக்கிறது.

பராமரிப்பு பணிகள்

இதுதவிர, ரயில்வே துறையும் தண்டவாளங்களை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்கிறது. சேதம் அல்லது குறைபாடு இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்கிறார்கள். தேவையான இடங்களில் பழைய தண்டவாளங்களை மாற்றுகிறார்கள். இதனால் ரயில் பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது.

துரு உருவாவது எப்படி?

பொதுவாக, இரும்புப் பொருட்கள் ஈரமாக இருக்கும்போது, காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிகின்றன. இதனால் இரும்பின் மேற்பரப்பில் பழுப்பு நிறத்தில் ஒரு படலம் உருவாகிறது. இதைத்தான் துரு என்கிறோம். இரும்பு, தண்ணீர், ஆக்சிஜன் ஆகியவை சேரும்போது இந்த மாற்றம் ஏற்படுகிறது.

ஆனால், ரயில் தண்டவாளங்களின் மீது ரயில்கள் தொடர்ந்து ஓடுவதால், சக்கரங்கள் உருளும் மேற்பரப்பில் படியும் துரு தேய்ந்து நீங்குகிறது. அதோடு, தண்டவாளங்களின் வலிமை, தரம், ரயில்வேயின் தொடர் பராமரிப்பு ஆகியவையும் அவற்றின் நீண்ட கால பயன்பாட்டுக்கு உதவுகின்றன. இதுவே ரயில் தண்டவாளங்கள் நீண்ட காலம் பயன்பாட்டில் இருப்பதற்கான முக்கிய காரணங்களாகும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+