அதிரடியாக சரியும் தங்கம் விலை.. ஆனாலும் வாங்க ஆளே இல்லையே! நகைக்கடைகளில் ஏன் இந்த அமைதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரியளவில் குறைந்து வருகிறது. இது நகை வாங்க திட்டமிட்டிருந்த மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க காத்திருந்த குடும்பங்களும் இந்த விலை சரிவை வரவேற்றுள்ளன. இருப்பினும், விலை குறைந்தவுடன் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கு என்ன காரணம்.. மக்கள் மனநிலை என்ன என்று நாம் பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அப்போது ஒவ்வொரு முறையும் தங்கம் விலை லேசாக குறையும் போது கூட நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். எங்கு தங்கம் விலை மீண்டும் அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் நகை கடைகளில் மொத்தமாக குவிந்துவிடுவார்கள்.

Gold Price Gold silve price

தங்கம் விலை

அதேநேரம் இப்போது சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, சவரன் 91720 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஓராண்டிற்கு பிறகு இப்போது தான் தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது.

கூட்டமே இல்லை

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவதால், நகை வாங்குவதை தள்ளிப்போட்டவர்கள் மீண்டும் கடைகளுக்கு வருவார்கள் என நகை வியாபாரிகள் எதிர்பார்த்தனர். கூட்டம் அலைமோதும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலை பெரிய அளவில் சரிந்தபோதும் வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கவில்லை. இது சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

தற்போதைய தங்கத்தின் விலையே குறைந்தபட்சமா அல்லது இன்னும் சரியுமா என்பதில் மக்களிடையே குழப்பம் இருக்கிறது. இதன் காரணமாகவே வெயிட் அண்ட் வாட்ச் என்பதை கடைப்பிடிக்கிறார்கள். அடுத்தாண்டு திருமணம் திட்டமிடுவோர் இன்னும் கொஞ்சம் நகை விலை குறையும்போது வாங்கலாம். அப்போது தான் ஒரே பட்ஜெட்டில் கூடுதல் நகைகளை வாங்க முடியும் என நம்புகிறார்.

நகை வியாபாரிகள்

இது குறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், "மக்கள் இப்போது அவசரப்படுவதில்லை. தங்கம் விலை குறைகிறது என்பதற்காக இதுதான் குறைந்தபட்ச விலை என சொல்ல முடியாது. தங்கம் விலை மேலும் குறையும் என மக்கள் நினைக்கிறார்கள். இதனால் நகை வாங்குவதற்காக ஒதுக்கியுள்ள முழு தொகையையும் ஒரே நேரத்தில் செலவிட மக்கள் தயங்குகிறார்கள். விலை தொடர்ந்து சரிவதால் ஏற்கெனவே அதிக விலை இருந்தபோது நகை வாங்கிய சிலரும் இப்போது வருத்தத்தில் உள்ளனர்" என்கிறார்கள்.

அடுத்து என்ன நடக்கும்

தங்கம் விலை டிசம்பரில் என்னவாகும் என்பதே முக்கியம். டிசம்பர் மாதம் அமெரிக்கா மத்திய வங்கி கூட்டம் நடைபெறுகிறது. அதில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்றே தெரிகிறது. அப்படி அதிகரித்தால் தங்கம் விலை பெரியளவில் சரியும். அமெரிக்க வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை என்றால் மட்டுமே விலை ஓரளவுக்கு ஏறும். இதனால் அடுத்த மாதம் அமெரிக்கா என்ன முடிவை எடுக்க போகிறது என்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டி உள்ளது.

இருப்பினும், வரும் வாரங்களில் நகை விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அறுவடை முடிந்த பிறகு விவசாயிகள் தங்கம் வாங்குவது வழக்கம் என்பதால், டிசம்பர் மாதத்தில் விற்பனை அதிகரிக்கலாம் என என்கிறார்கள். தங்கம் விலை குறைந்திருப்பது நல்லது தான் என்றாலும், அது அப்படியே விற்பனையில் எதிரொலிக்கவில்லை. விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருப்பதால், தங்க நகை விற்பனை மந்தமாகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+