மருதமலை சோகம் மறைவதற்குள் அடுத்த ஷாக்! பெரியதடாகத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை தின்னும் காட்டு யானை

Subscribe to Oneindia Tamil

கோயமுத்தூர்: கோவை, பெரியதடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில், காட்டு யானை ஒன்று உணவு தேடி பிளாஸ்டிக் கவர்களைச் சாப்பிடும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிச் சூழலியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், ஆனைகட்டி மற்றும் தடாகம் வனப்பகுதிகள் கேரள வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய யானை வழித்தடமாக (Elephant Corridor) இப்பகுதி விளங்குவதால், இங்கு எப்போதும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். தற்போது மாங்கரை மற்றும் தடாகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

Coimbatore elephant

மாங்கரை பெரியதடாகம்

மாங்கரை அருகே உள்ள பெரியதடாகம் பகுதியில் மலை நடுவே அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. பொதுவாகக் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் பக்தர்கள் பாதுகாப்பாகச் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

பக்தர்கள் வீசிய குப்பை

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள், கோவில் அடிவாரத்தில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பெண் காட்டு யானை ஒன்று நின்று கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு இருந்த குப்பைக் குவியலில் உணவு தேடிய அந்த யானை, பக்தர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் உணவுக் கழிவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்தது.

இதனைக் கண்ட பக்கர்கள் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை வனச்சரகர்

இது குறித்து கோவை வனச்சரகர் திருமுருகன் கூறுகையில், "கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஒரு சிலர் கொண்டு வரும் பிளாஸ்டிக் குப்பைகளை அங்கேயே வீசிச் செல்கின்றனர். வனப்பகுதிக்குள் குப்பை கொட்டக் கூடாது எனக் கோவில் நிர்வாகத்திற்குப் பலமுறை அறிவுறுத்தி உள்ளோம்" என்றார்.

பிளாஸ்டிக் குப்பைகள்

சமீபத்தில் தான் கோவை மருதமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை ஒன்று உயிரிழந்தது. அந்தச் சோகம் மறைவதற்கு உள்ளேயே, அதன் அருகில் உள்ள அனுவாவி கோவில் பகுதியிலும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை யானை சாப்பிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவில் நிர்வாகம்

எனவே, கோவில் நிர்வாகம் வனப்பகுதியில் குப்பை கொட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+