Gold Price: தங்கம் விலை ரூ.85 ஆயிரம் வரை சரியலாம்.. மார்ச் வரை இப்படித்தான் இருக்கும்! ஆனந்த் சீனிவாசன் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price) படுத்தேவிட்டதய்யா என்று சொல்கிற அளவுக்கு தாறுமாறாக சரிந்து வருகிறது. இன்னும் சரியுமா, இல்லை திடீரென ஷாக் கொடுத்து உயர்ந்துவிடுமா? எனவும் நகை பிரியர்கள் தங்கம் விலை குறித்த செய்திகளை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை 85 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், வரும் மார்ச் மாதம் வரை குறைவதற்கான சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து தினம் தினம் உச்சம் தொட்ட தங்கம் விலை இந்த ஆண்டு ஜனவரி வரை விடாமல் உயர்ந்தது. ஒரு சவரன் 57 ஆயிரம் என்று இருந்த தங்கம் விலை ஒரே ஆண்டுக்குள் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற அளவு உயர்ந்து நகை பிரியர்களை மீள முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனிமேல் எங்கே குறைய போகிறது என நினைத்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தற்போது தங்கம் விலை மளமளவென சரிந்து வருகிறது.

Gold price to drop to Rs 85 000 it will remain this way until March Anand Srinivasan prediction

தினம் தினம் குறைந்த தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழேயும் சென்றது. அதோடு நிற்காமல் மேலும் சர்ப்ரைஸ் தரும் விதமாக தற்போது ஒரு சவரன் ரூ.91,720 என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இதனால் நகை வாங்க திட்டமிட்ட பலரும் தற்போது நகையை வாங்கிவிடலாமா என எதிர்பார்த்துள்ளனர். எனினும் மேலும் தங்கம் விலை குறையுமா எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். இந்நிலையில் தங்கம் விலை வரும் மார்ச் மாதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

ஆனந்த் சீனிவாசன் கணிப்பு

நான் மூன்று, நான்கு மாதங்களாக கூறியது போலவே தங்கம் விலை குறைந்துகொண்டே வருகிறது. இப்போதைக்கு இதே அளவில் தான் இருக்கும். ஆனால் அமெரிக்காவில் வட்டி விகிதம் எவ்வளவு ஏற்றப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. டிசம்பர் 7, 8 ஆம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு. அதில் வட்டி விகிதம் கூடுமா இல்லையா என்பது தெரிந்துவிடும். கால் பெர்சண்டேஜ் தான் ஏற்றப்போகிறார்கள் என்றால் இவ்வளவு தூரம் குறைந்து இருக்காது.

ஆனால் சிலர் அரை பெர்சண்டேஜ் ஏற்றப்போவதாக சொல்கிறார்கள். இதனால் தான் இவ்வளவு தூரம் தங்கம் விலை குறைந்து இருக்கிறது. டிசம்பர் 7, 8 ஆம் தேதி வரை குறைய வாய்ப்பு இருக்கு. அப்போது வட்டி விகிதத்தை அரை பெர்சண்டேஜ் வரை ஏற்றலாம். இதே போல் மார்ச் மாதத்திற்குள் இன்னொரு முறை வட்டி விகிதத்தை மாற்றுவார்கள். அப்போது ஒரு அரை பெர்சண்டேஜ் என எடுத்துக்கொண்டால் மொத்தம் ஒரு பெர்சண்டேஜ் வரை அமெரிக்காவில் வட்டி விகிதம் ஏற வாய்ப்பு இருக்கிறது.

85 ஆயிரம் - 90 ஆயிரத்துக்குள் இருக்கும்

மார்ச்க்குள் 1 பெர்சண்டேஜ் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய அளவு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இப்படி உயர்ந்தால் டாலரின் மதிப்பு மேலும் கூடும். எல்லா பணமும் டாலர் பக்கம் போகும். டாலர் மதிப்பு கூட கூட தங்கத்தின் விலை குறையத் தொடங்கும். ஆனால் எவ்வளவு விலை குறையும் என்பதை, சீனா எவ்வளவு தங்கம் வாங்குகிறது என்பதை பொறுத்து அமையும்.

சீனா தான் இப்போது தங்கத்தை அதிகளவில் வாங்க இருக்கிறது. அந்த அரசு அதை வெளிப்படையாக அறிவிக்காது. அவங்க வாங்குறதை வைத்து தான் தங்கம் விலை எவ்வளவு குறையும் என தெரியும். எப்படி பார்த்தாலும் வரும் மார்ச் மாதம் வரை தங்கம் விலை இப்படியே போக வாய்ப்பு உள்ளது. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு. தோராயமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85 ஆயிரம் முதல் 90 ஆயிரத்திற்குள் இருக்கும்.. என்று கூறினார்.

கடந்த சில மாதங்களில் தங்கம் விலை

22-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,720 (இன்று)
01-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840

31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320

30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080

31.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,14,960
01.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

31.07.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,06,040
01.07.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,800

01-06-2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,17,040

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+