திமுக எம்எல்ஏக்களை இழுக்க அமைச்சர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு? ரெடியாகும் மெகா ஆபரேஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற அச்சமும் பரபரப்பும் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கிடையில், தவெக ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும்.. மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும்" என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.

இத்தகைய நெருக்கடியான சூழலில், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் விஜய் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களைத் தங்கள் பக்கம் இழுத்த, தவெகவில் இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்துமாறு தனது அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் சிலருக்கு முதல்வர் விஜய் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

tvk vijay dmk

திமுகவினர் தவெகவுக்கு வருவார்களா? மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

ஆனால், முதல்வர் விஜய்யின் இந்தத் திட்டம் களத்தில் எடுபடுமா என்பது குறித்து மூத்த அரசியல் பத்திரிகையாளர்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். விஜய் உத்தரவிட்டாலும், திமுகவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் முக்கிய நிர்வாகிகள் அவ்வளவு எளிதில் கட்சியை விட்டு வெளியேறி தவெகவில் இணைய வாய்ப்பில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

திமுகவின் கட்டமைப்பு மிகவும் வலுவானது என்றும், ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகி வரும் நேரத்தில் ஆளுங்கட்சியை நோக்கி திமுக நிர்வாகிகள் செல்வது அரசியல் ரீதியாகப் புத்திசாலித்தனமாக இருக்காது என்றும் பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

சரிந்து வரும் தவெக செல்வாக்கு:

மேலும், தவெக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் அரசுக்கான ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிரைம்கள்அதிகரித்துள்ளன . சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான தொடர் சர்ச்சைகள் ஆகியவை அரசின் நற்பெயருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், தேர்தல் நேரத்திலும் அதற்குப் பிறகும் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரே தற்போது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தவெகவின் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டுள்ள அவர்கள், மீண்டும் தாய்க் கட்சிக்கோ அல்லது வேறு முகாமிற்கோ திரும்பலாமா என யோசித்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இரட்டைச் சவாலில் தவெக தலைமை

ஒருபுறம் சட்டமன்றத்தில் வரக்கூடிய நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முறியடித்து ஆட்சியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம். சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஒத்துழைப்பு, ஆட்சிக்கு ஆபத்து வரும் நேரத்தில் மிகவும் அவசியமானதாக உள்ளது. அதிலும் சிபிஎம், சிபிஐ உடன் தற்போது தவெகவிற்கு மோதல் போக்கு உள்ளதால்.. அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளது.

கூட்டணியை சிதறாமல் அப்படியே தக்கவைத்துக் கொள்வதோடு, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதனைத் தடுத்து நிறுத்தவும் அல்லது வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெறவும் வேண்டும்.

மறுபுறம் சொந்தக் கட்சிக்குள் ஏற்படும் சலசலப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி என முதல்வர் விஜய் இரட்டைச் சவாலை எதிர்கொண்டுள்ளார்.

திமுக நிர்வாகிகளை இழுப்பதன் மூலம் எதிர்க்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க தவெக தலைமை நினைத்தாலும், முதலில் தன்னுடன் இருப்பவர்களைத் தக்கவைத்துக்கொள்வதே விஜய்க்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+