"எங்களை விட்டுடுங்க".. அமெரிக்க அதிகாரிகளின் காலைபிடித்து கெஞ்சிய பெண்.. என்ன நடந்தது? பின்னணி
வாஷிங்டன்: ''எங்களை விட்டுவிடுங்கள். பணி செய்வற்கான உரிய அனுமதி இருக்கிறது. எங்களை விட்டுவிடுங்கள்'' என்று பெண் ஒருவர் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகளின் காலை பிடித்து கெஞ்சிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள டகோமா சர்வதே விமான நிலையத்தில் 'அலாஸ்கா ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் லாஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட ரெடியாக இருந்தது.
இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் 'ஜெட் பிரிட்ஜ்' வழியாக விமானத்திற்குள் நுழைந்து வந்தனர். அப்போது ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவரும் விமானத்தில் ஏற முயன்றர்.
அப்போது முகத்தில் மாஸ்க் அணிந்து நின்ற அதிகாரிகள் ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேரை தடுத்து நிறுத்தி தங்களுடன் வரும்படி கூறினர். முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அவர்கள் யார்? என்று தெரியவில்லை. தங்களை அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறியதோடு, இருவரையும் விமானத்துக்கு செல்ல விடாமல் வெளியேற்ற முயன்றனர். இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதிகாரிகள் இருவரையும் விடவில்லை. விமானத்துக்கு செல்ல விடாமல் இருவரையும் கீழே இறக்க முயன்றனர். இதனால் அவர்கள் அதிகாரிகளின் காலை பிடித்து கொண்டு கதறி அழுதனர். ''எங்களை விட்டு விடுங்கள். எங்களிடம் பணி செய்வதற்கான அனுமதி உள்ளது.. நோ.. நோ'' என்று கத்தினர். ஆனால் அதிகாரிகள் மனம் இறங்கவில்லை. விமானத்திற்குள் நுழைய விடாமல் இருவரையும் இறக்கி அதிரடியாக கைது செய்தனர்.
Masked ICE Agents Allegedly Pushed Past Passengers and Detained Two Travelers Waiting to Board at Sea-Tac Airport #seattle https://t.co/4aFIRzNMZJ
— SEATTLESUBMISSIONS (@SEATTLESUBMISS) November 21, 2026
இதுபற்றி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில், '' நவம்பர் 21 அன்று காலை 8:05 மணிக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த ரிக்கார்டோ லாரோண்டோ மெண்டோசா என்பவரைக கைது செய்ய நடவடிக்கை எடுத்தோம். அவர் தனது விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல் விசா காலாவதியான பிறகும் தங்கிய மெக்சிகோவை சேர்ந்த சோபியா ஹெர்னாண்டஸ் மெஜியா என்ற இன்னொரு பயணியும் கைது செய்ப்பட்டார். இவரைகளை கைது செய்தபோது அதிகாரிகள் மீது சூடான காபி வீசப்பட்டது. இதன்மூலம் அதிகாரியை தாக்கி பணிக்கு இடையூறு செய்தார். இந்த நடவடிக்கையின் போது மற்ற பயணிகள் அதிகாரிகளுக்கு இடையூறு செய்ய முயன்றனர். இதுவும் சட்டப்படி குற்றம்'' என விளக்கம் அளித்துள்ளது.
இவர்கள் 2 பேரையும் கைது செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில், பெண் ஒருவர், ''என்னுடைய மகளை விட்டுவிடுங்கள்'' என கதறுவது பதிவாகி உள்ளது. அதேபோல் இன்னொரு பெண்ணும், ஆணும், அதிகாரிகளின் கால்களை பிடித்து தங்களிடம் பணி செய்வதற்கான அனுமதி உள்ளது என்று கெஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது பலரையும் கலங்க வைத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக விமானம் புறப்படுவது தாமதமானது. இந்த சம்பவத்துக்கு 'அலாஸ்கா ஏர்லைன்ஸ்' நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ''அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் பயணியை தடுத்து நிறுத்த உள்ளோம் என்பது பற்றி முன்கூட்டி எந்த தகவலும் சொல்லவில்லை. அவர்களின் செயலால் விமானம் தாமதமாகி உள்ளது. பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
