ஆன்லைனில் வாங்கிய ஃபேர்னஸ் கிரீம்.. 17 வயது சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு! ரத்தத்தில் கலந்த பாதரசம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சமூக வலைத்தள விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் ஃபேர்னஸ் கிரீம் வாங்கி பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு, தற்போது தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கிரீமை பரிசோதித்தபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக பாதரசம் இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலத்தில் இன்ஸ்டாகிராமில் வரும் விளம்பரத்தை பார்த்தே பலரும் பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் அழகுசாதன பொருட்களை பலரும் இன்ஸ்டா மூலமாகவே வாங்குகிறார்கள். இருப்பினும், கண்ணை மூடிக்கொண்டு இதுபோன்ற பொருட்களை வாங்குவது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை உணர்த்தும் சம்பவம் இப்போது நடந்துள்ளது.

kerala india

பாதிப்பு

கேரளாவில் சமூக வலைத்தள விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் ஃபேர்னஸ் கிரீம் வாங்கி பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு, தற்போது தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலப்புரத்தில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மதர் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வெளியிட்ட விளம்பர வீடியோக்களை பார்த்து அவர் இந்த கிரீமை வாங்கியுள்ளார். முகப்பருக்கள், கரும்புள்ளிகள், சரும நிறமாற்றம் ஆகியவற்றை நீக்கி சருமத்தை மேம்படுத்தும் என விளம்பரங்களில் கூறியுள்ளனர்.

கிரீம்

இன்ஸ்டாகிராமில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் நம்பரை தொடர்புகொண்டு கிரீமை ஆர்டர் செய்துள்ளார். ஆரம்பத்தில் அதை பயன்படுத்தியபோது நல்ல பலன் கிடைத்ததாக கருதிய சிறுமி, ஓராண்டிற்கு தேவையான கிரீமை வாங்கியுள்ளார். ஆனால், நாளடைவில் அவருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட தொடங்கியுள்ளன. திடீரென ரத்த அழுத்தம் குறைவது, மயக்கம் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் இருந்துள்ளன. மேலும், கால்களில் வீக்கம் ஏற்பட்டதால் நடப்பதற்கும் படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையை அணுகியுள்ளார்.

டாக்டர் கௌரி

சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் நிபுணர் டாக்டர் கௌரி, மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளது. அதில் அவரது ரத்தம் மற்றும் உடலில் அபாயகரமான அளவில் பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாதரசம் என்பது தீவிர சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சிறுமிக்கு 'மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி' எனப்படும் தீவிர சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மேலும் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சிறுமி பயன்படுத்திய கிரீமை பரிசோதித்ததில் 12,500 பிபிஎம் அளவுக்கு பாதரசம் இருப்பது தெரியவந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். இந்த பாதரசம் கலந்த கிரீம்தான் சிறுமியின் சிறுநீரக பாதிப்புக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சரும பிரச்சினைகள்

இது குறித்து மருத்துவர் கூறுகையில், "உடனடியாக பலன் தரும் என எந்தவொரு க்ரீமை விற்றாலும் நம்ப வேண்டாம். சரும பிரச்சினைகள் இருப்பவர்கள் இதுபோன்ற பொருட்களைத் தாங்களாகவே வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தோல் மருத்துவ நிபுணர்களை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும்" என்றார்.

தனக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சிறுமி முதலில் புகார் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த நிறுவனத்திடம் இருந்து உரிய ரெஸ்பான்ஸ் இல்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க சிறுமியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+