இந்திய ரயிலையும், சீனா ரயிலையும் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர்.. போட்டு பிளந்த நெட்டிசன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்களையும் சீன ரயில்களையும் ஒப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்திய ரயில்கள் மிகவும் அழுக்காகவும் அசுத்தமாகவும் இருப்பதாகவும் சீன ரயில்கள் சூப்பராக பராமரிக்கப்படுவதாகவும் இளைஞர், இருநாட்டு ரயில்களையும் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதோடு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Indian and Chinese trains sparks heated debate among netizens

சீனா - இந்தியா ரயில்களை ஒப்பிட்டு வீடியோ

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மானவர் சையது ஷா ஆலம். இவர் ஆராய்ச்சி படிப்புக்காக தற்போது சீனாவில் தங்கியுள்ளார். சீனாவில் அடிக்கடி ரயில் பயணம் மெற்கொண்டு வரும் ஷா ஆலம், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தியில் இந்திய ரயில் பயணத்தையும் சீனாவில் ரயில் பயணம் மேற்கொண்ட போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வீடியோவக வெளியிட்டு இருந்தார்.

59 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் இளைஞர் கூறுகையில், 'நான் இந்தியாவிலும் சீனாவிலும் சாதாரண ரயில்களில் பயணம் செய்து இருக்கிறேன். இவை இரண்டையும் ஒப்பிட்டால், இந்திய ரயில்களில் டாய்லட் மிகவும் அசுத்தமாக பராமரிக்கப்படும். சீனாவில் உள்ள ரயில்களில் ஒரு கறை கூட இல்லாமல் டாய்லட்கள் சுத்தமாக உள்ளன.

சீனா ரயில்கள் சுத்தமாக உள்ளன

அனைத்து பயணிகள் இறங்கிய பிறகும் கூட ரயில் முழுவதும் சுத்தமாக உள்ளது. ஆனால் இந்திய ரயில்களில், மக்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசிவிட்டு செல்வார்கள்.. இந்திய ரயில்களில் ஜன்னல்களை திறந்துவிட்டு கைகளை வெளியில் தெரியுமாறு வைத்துக்கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சீனாவில் ரயில்களில் ஜன்னல்கள் திறக்கப்படுவது இல்லை.

மெயின் டோர் கூட ஸ்டேஷனுக்கு வந்த பிறகு ரயில்வே கார்டால் மட்டுமே திறக்கப்படுகிறது" என்று பதிவிட்டு இருந்தார். வீடியோவின் நிறைவில், இந்திய ரயில்களில் இன்னும் நிறைய மேம்படுத்த வேண்டியுள்ளது. இதை சுட்டிக்காட்டினால் மக்கள் உங்களை தேசத்திற்கு எதிரானவர்கள் என்று கூறுவார்கள்' என்று பதிவிட்டு இருந்தார்.

காட்டமாக விமர்சித்த நெட்டிசன்கள்

இந்திய ரயில்கள் மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும், சீனா ரயில்கள் கிளீனாக இருப்பதாகவும் அந்த இளைஞர் பதிவிட்டு இருந்ததை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இந்தியாவை மட்டம் தட்டும் வகையில் வீடியோவை வெளியிடுவதாக என காட்டமாக பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இந்திய ரயில்வே பட்ஜெட்டையும் சீன ரயில்வே பட்ஜெட்டையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு வீடியோ போட வேண்டும்.

சீன ரயில்வே பட்ஜெட் 100 பில்லியனை தாண்டுகிறது. இந்திய ரயில்வே பட்ஜெட் 35 பில்லியன் அளவுதான். அந்த நாட்டின் பொருளாதாரம் நம்மை விட 5 மடங்கு அதிகம். எனவே இதை ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லை என்று பதிவிட்டு இருந்தனர். அதே போல, மேலும் சில நெட்டிசன்களும் வெளிநாடு போய் நமது ஊரை இழிவு செய்யும் வகையில் பதிவிடுகிறார் என்று கமெண்ட் அடித்தனர்.

உண்மையில் அருமையான வீடியோ என பதிவு

இப்படி ஒருபக்கம் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தாலும் ஒரு தரப்பு நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இளைஞர் ஆலம் கூறுவதில் எந்த தவறும் இல்லை. நமது மக்களிடையேயும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. வெறும் நிர்வாகத்தை மட்டும் விமர்சிப்பது அவசியமற்றது என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், 'இது உண்மையில் அருமையான வீடியோ. இதை ஒப்பீடாக பார்க்க கூடாது. நம்மிடம் உள்ள குறைகளை தெரிந்து கொண்டு நிவர்த்தி செய்வது அவசியம்' என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+