திருச்செந்தூரில் காதலி மீது சந்தேகம்! பிளஸ் 1 மாணவியை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர் தற்கொலை முயற்சி!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே காதல் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டு பிளஸ் 1 மாணவியை கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்த இளைஞர், தானும் தற்கொலைக்கு முயன்று படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள செபத்தையாபுரம் சோலைபுதூர் வேதமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிபாண்டியன் மகன் முத்துராஜா. இவர் செபத்தையாபுரம் பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

tiruchendur crime

அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய அபர்ணா, செபத்தையாபுரம் முத்துமாலை அம்மன் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், மாணவியின் படிப்பு முடிந்த பிறகு திருமணம் தொடர்பாக பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாணவி வேறொரு நபருடன் செல்போனில் பேசுவதாக சந்தேகமடைந்த முத்துராஜா, அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த முத்துராஜா, மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவியை கத்தியால் குத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, முத்துராஜா கூர்மையான ஆயுதத்தால் தனது உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் உடல் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பிளஸ் 1 மாணவி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+