சீட்டுக்கு அடியில் சடலம்! நொறுங்கிய விலா எலும்புகள்! நாகர்கோவில் ரயிலில் பெண்ணுக்கு நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் பின்னணி வெளியாகி உள்ளது.

இந்த வழக்கில் 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

crime Nagercoil

நடந்தது என்ன? ரயில் பெட்டிக்குள் கிடந்த சடலம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கடந்த நவம்பர் 11-ம் தேதி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்குப் பயணிகள் ரயில் (வண்டி எண்: 16366) ஒன்று வந்தது. அந்த ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பராமரிப்புப் பணிகளுக்காக ரயில் நிலையத்தின் 'யார்டு எண் 13' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த நவம்பர் 18-ம் தேதி அந்த ரயிலை மீண்டும் கோட்டயத்திற்கு இயக்குவதற்காக ஊழியர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ரயிலின் கடைசிப் பகுதியில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியைச் சுத்தம் செய்த ஊழியர்கள், அங்கிருந்த இருக்கைக்கு அடியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த உண்மை

உடனடியாக இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அளித்த புகாரின் பேரில், போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அப்பெண்ணின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், அப்பெண் இயற்கையாக உயிரிழக்கவில்லை என்பதும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. குறிப்பாக, அவரது விலா எலும்பு மற்றும் இடுப்புப் பகுதிகளில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றினர்.

சிசிடிவி காட்சிகளும் தனிப்படை விசாரணையும்

குற்றவாளியை உடனடியாகப் பிடிக்க திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பச்சாரி, நெல்லை கோட்ட டிஎஸ்பி லட்சுமணன் ஆகியோரின் மேற்பார்வையில், நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் ரயில் நிலையத்தின் 4 மற்றும் 5-வது நடைமேடைகள் (பிளாட்பாரங்கள்) மற்றும் யார்டு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், நவம்பர் 13-ம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிந்ததும், மறுநாள் (நவம்பர் 14) காலை 8 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்ட அதே ரயில் பெட்டியிலிருந்து வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்த நபர் ஒருவர் இறங்கிச் சென்றதும் பதிவாகியிருந்தது. மேலும், அவரது விரலில் இருந்த மோதிரம் முக்கியத் தடயமாக அமைந்தது.

குற்றவாளி கைது ம

சிசிடிவி காட்சிகளில் பதிவான உருவத்தை வைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், நவம்பர் 20-ம் தேதி நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்த நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஜே. அய்யப்பன் (31) என்பது தெரியவந்தது.

போலீசாரிடம் அய்யப்பன் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணமாகாத அய்யப்பன், கடந்த 4 மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையப் பகுதிகளிலேயே சுற்றித் திரிந்துள்ளார். கடந்த நவம்பர் 13-ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில், யார்டு பகுதியில் நடந்து சென்ற அப்பெண்ணை அய்யப்பன் வழிமறித்து அத்துமீறியுள்ளார்.

அப்பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அய்யப்பன், அவரைச் சரமாரியாகத் தாக்கி மயக்கமடையச் செய்து, அருகிலிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிக்குள் தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அப்பெண் சுதாரித்து எழ முயன்றபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கொடூரமாகத் தாக்கி, எலும்புகளை முறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் தெரியாமல் இருக்க உடலை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு மறுநாள் காலை தப்பிச் சென்றுள்ளார்.

கொல்லப்பட்ட பெண் யார்? தொடரும் விசாரணை

கைது செய்யப்பட்ட அய்யப்பன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சடலம் 4 நாட்களுக்கு மேலாகப் பெட்டிக்குள் கிடந்ததால் முகம் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால், கொல்லப்பட்ட பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் காணாமல் போன பெண்களின் பட்டியலை வைத்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் இன்று தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ரயில் நிலைய வளாகத்திற்குள்ளேயே ஒரு பெண்ணுக்கு இப்படியொரு கொடுமை நடந்திருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிக்கு விரைந்து உரிய தண்டனை கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+