கடகம் ராசி: வீடு, வாகனம் வாங்கும் யோகம்.. குடும்ப விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-kadagam-people-from-nov-23-to-29

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசியினருக்கு குடும்ப வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு பல், எகிறு, வேர் சிகிச்சை, மூக்கில் பிரச்சனை, முகத்தில் வெட்டுக்காயம் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணைக்கு சிறிய அறுவை சிகிச்சைகள், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அனுகூலம்

யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வீடு அலங்காரம், வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பசு மாடு வாங்குவது, தோட்டங்கள் வாங்குவது போன்ற யோகம் ஏற்படும். அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் முதுகுவலி, கேல்சியம் குறைபாடு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.

அனுகூலம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். இதுவரை இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் நீங்கும். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஒரு விஷயத்தை ஒருமுறைக்கு, இருமுறை முயற்சி செய்து செய்ய வேண்டியதாக இருக்கும். வேறு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

ஆரோக்கியம்

வயிறு, நரம்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. உறவுகளால் அனுகூலம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அபிராமி அந்தாதியைப் படிப்பது பிள்ளைகளுடன் இருந்து வந்த பாதிப்புகளை போக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

வழிபாடு

அற்புதமான மாற்றங்கள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். விநாகர் வழிபாடு, அடுத்த 18 மாதத்துக்கு சிதறு தேங்காய் உடைப்பது நன்மையையும், சந்தோஷத்தையும் தரும். முருகரை வழிபாடு செய்து வர வர மனமாற்றம், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் என சகலவித நன்மைகளையும் அள்ளித் தரும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 75 சதவீதம் நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+