நாளை முதல் மழை ஆட்டம் ஆரம்பம்! சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்
சென்னை: சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் மழை இல்லை. நவம்பர் மாதத்தில் இதுவரை பெரிய மழை பெய்யாததால் மாத இறுதியிலாவது மழை பெய்யுமா என எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்றிலிருந்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு கனமழை அலர்ட்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 20 மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
