"அவர் என் புருஷன்" 2வது திருமணத்துக்கு முயன்ற மாப்பிள்ளைக்கு முதல் மனைவி கொடுத்த ஷாக்! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

லக்னோ:''அவரு என்னோட புருஷன்.. என்னை கரம்பிடித்துவிட்டு இங்க வந்து 2 திருமணம் செய்கிறார்'' என கத்திய பெண்ணால் மொத்த திருமண அரங்கமும் அதிர்ந்துபோனது. இந்த சத்தம் கேட்டு உடனே வந்த போலீசார் இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட காத்திருந்த அந்த இளைஞரை மண்டபத்தை விட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் இட்டா என்ற பகுதியில் உள்ள ஜிஐசி மைதானத்தில் அரசு சார்பில் 'முக்கியமந்திர சாமுகிக் விவாஹ யோஜனா' எனும் திட்டத்தில் ஏழை ஜோடிகளுக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.

uttar pradesh marriage wedding

இந்த விழாவால் அந்த மைதானமே திருமண கோலம் பூண்டு இருந்தது. விழாவிற்காக திருமண அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. கெட்டி மேளம் முழங்க ஒவ்வொரு மணமகனும், தங்களின் ஜோடியான மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட தயாராகி வந்தனர்.

அப்போது தான் அங்கு பெரிய ட்விஸ்ட் நடந்தது. திடீரென்று வந்த பெண் ஒருவர் மாப்பிள்ளையாக நின்றவரிடம் கத்தி கூச்சலிட்டார். அவரை அங்கிருந்த போலீசார் அமைதிப்படுத்த முயன்று அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் 'இது என்னுடைய கணவர்ங்க.. என்னுடைய கணவர் எனக்கு தெரியாமல் இங்கு வந்து 2வது திருமணம் செய்கிறார். அதனை தடுத் நிறுத்த வேண்டும்'' என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த மாப்பிள்ளையை வெளியே இழுத்து சென்றனர். அவர் கோர்ட் - சூட் அணிந்து மாப்பிள்ளையாக இருந்த நிலையில் அவரை போலீசார் பிடித்து திருமண விழா நடக்கும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது பெயர் ஆகாஷ் என்பவர் மார்ஹாரா பகுதியில் உள்ள மிராசாராய் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இவர் சாமன் நாகரியா என்ற கிராமத்தை சேர்ந்த சோனி என்பவரை திருமணம் செய்தார். இவர்ளின்திருமணம் கடந்த 2021ம் ஆண்டு 14ம் தேதி வநடந்தது. இநத தம்பதி இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் கோபமான ஆகாஷ் தனது முதல் மனைவி சோனியை விட்டுவிட்டு ரகசியமாக 2வது திருமணம் செய்ய முயன்று சிக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் திருமணம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து ஆகாசை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இங்கு 'முக்கியமந்திர சாமுகிக் விவாஹ யோஜனா' எனும் திருமண திட்டம் உள்ளது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள பெண்களுக்கு அரசு சார்பில் திருமணம் செய்து வைக்கப்படும்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.1 லட்சம் வரை அரசு செலவழிக்கும். திருமணத்தின்போது மணமகளின் வங்கி கணக்கில் ரூ.60 ஆயிரமும், ரூ.25 ஆயிரத்துக்கு வீட்டுக்கு தேவையான சீர் வரிசைகளும், திருமண செலவுகளுக்காக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தான் ஆகாஷ் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ய முயன்று போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+