தஞ்சை அருகே கோரம்! பைக் மீது லாரி மோதல்! தாய், 2 மகன்கள் பலி! மேலும் ஒரு மகன் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தாய், 2 மகன்கள் என 3 பேர் உயிரிழந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்த பெனாசிர் பேகம் (26), இவருக்கு முகமது ஜாவித் (12), முகமது ஜாசித் (10), முகமது ஹாலித் (5) ஆகிய 3 மகன்கள். இந்த நிலையில் இன்று தனது 3 மகன்களையும் ஒரே பைக்கில் அழைத்துக் கொண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தார்.

Tanjore accident

திருவையாறு- தஞ்சை சாலையில் அம்மன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, இவர்களது பைக் மீது மோதியதில் கீழே விழுந்த 4 பேரும் காயமடைந்தனர். அவர்களில் பெனாசிர் பேகம், முகமது ஜாசித், முகமது ஹாலித் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மூத்த மகன் முகமது ஜாவித் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடுகாவேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த 3 உடல்களையும் மீட்ட போலீஸார் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+