செஞ்சி சிறுமிக்காக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம்! funnyயாக இருக்கு! கீதா ஜீவன் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

செஞ்சி: செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸார் யாகம் நடத்தியது Funny-யாக இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார்.

உலக மீனவர் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

gingee geetha jeevan

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரிய செயல். அதேபோன்று அந்த இளைஞரும், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இளம் வயதினர், இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் விரும்புவதை தவறாக கூறவில்லை. ஆனால் 18 வயது முடியட்டும். அதன் பின்பு திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரைக்கும் உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். இது போன்ற ஒரு போட்டியினால் கொல்வதென்றால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை.

இளைஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எந்த வயதாக இருந்தாலும் பாதுகாப்பற்ற ஒரு சூழல் நிலவுகிறது. யாருக்கும் பயமில்லை. தண்டனைக்கோ காவல்துறைக்கோ ஒரு பயமற்ற சூழல் வளர்ந்து வருகிறது. இதை ஆளும் ஆட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை நல்ல முறையில் நிலை நாட்ட வேண்டும்.

செஞ்சி காவல் நிலையத்தில் போலீசார் யாகம் வளர்த்த விவகாரம் குறித்த கேள்விக்கு? போலீசார் செயல் FUNNY- யாக உள்ளது. தொலைந்து போன குழந்தையை கண்டுபிடியுங்கள் என்றால் போலீசார் உட்கார்ந்து கொண்டு யாகம் வளர்த்துக் கொண்டிருப்பது என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லை. இப்படி ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி போகிறது. மிகப்பெரிய கேள்விக்குறி., காவல்துறையினர் தனது கடமையை செய்யாமல் மடைமாற்றம் செய்கிற ஒரு ஆட்சி நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்வை பார்த்தீர்கள் என்றால் காலில் செருப்பு இல்லாமல் தூக்கி செல்ல வேண்டும் என்று சட்டம் கிடையாது. செருப்பு இல்லாமல் போவதால் போகும் இடம் எல்லாம் பூவை தூவி போவது எல்லாமே ஷூட்டிங்காக இருக்கிறது. அதேபோல் மடைமாற்றம் செய்ய, திசை திருப்ப போலீசார் செய்த செயல் வருந்தக்கூடிய செயல்..

அதேபோல், அமைச்சர்களும் தன் நிலை அறியாமல் இருக்கிறார்கள்.. ஒரு பெண்ணை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்திற்கு அழைக்கக்கூடாது. விசாரணை என்கின்ற பெயரில் காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது என சட்டம் இருக்கும்போது அமைச்சர் சென்று உட்கார்ந்து கொண்டு ஒரு பெண் எஸ்பியை தொலைபேசி மூலம் இங்கு வாருங்கள் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

பெண்ணானவள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பெண்ணை போக பொருளாகவும், நக்கலாகவும் பேசுவோம். கலாய்ப்போம் என்கின்ற மாதிரியான மனநிலை ஏன் உருவாகி உள்ளது. வருத்தமாக உள்ளது. இதைப் பார்த்து தலை குனிவு தான் ஏற்படுகிறது. பெண்ணை மதிக்கத் தெரியாத தமிழக வெற்றி கழக ஆட்சி நடைபெறுகிறது.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு ஏதாவது உத்தரவு வந்திருக்கும். அதனால் அவர் வாய் திறக்காமல் இருந்திருப்பார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலைகள் நடைபெறுவது சளிப்பு வந்துவிட்டது. இதேபோன்று குற்ற செயல்கள் நடைபெறுகிறது. ஏன் என்று சொல்லிச் சொல்லி நமக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட ஒரு கொலை கம்மிதான் என்று பேசக்கூடிய அதிகாரிகள், ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டு என்ன சொல்வது? என்றார் கீதா ஜீவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+