கேரள பெண்ணுக்கு லாட்டரியில் அடித்தது யோகம்! ஓரே நாளில் கொட்டியது பணமழை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த 27 வயதான ஆர்த்ரா என்ற பெண்ணுக்கு பல ஆண்டுகளாக எதிர்பார்த்த அதிர்ஷ்டம் லாட்டரியில் அடித்துள்ளது. லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பதாக லாட்டரி நிறுவனம் தரப்பில் இருந்து வந்த அழைப்பை கலாய்க்கிறார்கள் என நினைத்து எடுக்காமல் விட்ட அந்த பெண்ணுக்கு சிறிது நேரத்தில் உண்மை தெரிந்ததும் சந்தோஷத்தில் திளைத்துவிட்டாராம். லாட்டரியில் எவ்வளவு பரிசு கிடைத்தது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கேரளாவை சேர்ந்தவர் ஆர்த்ரா கில்க்கே செதில். 27 வயதான இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வசித்து வருகிறார். திருமணம் ஆன பிறகு தனது கணவருடன் ஷார்ஜாவுக்கு குடிபெயர்ந்த ஆர்த்ரா, அங்குள்ள ஒரு கட்டிடம் ஒன்றில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Luck strikes for Kerala woman in the lottery wins Dh 25 0000 in abudhabi

பலமுறை லாட்டரி வாங்கியும் ஏமாற்றமே மிஞ்சியுள்ள்ளது. ஆனாலும் யார் யாருக்கோ அடிக்கும் அதிர்ஷ்டம் நமக்கும் ஒரு நாள் அடிக்காமலா போகப்போகிறது என்று தொடர்ந்து பிக் டிக்கெட் லாட்டரியை வாங்கி வந்துள்ளார். தனது நண்பர்களுடன் குழுவாக லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ள ஆர்த்ரா இந்த முறை தனது பெயரில் ரிஜிஸ்டர் செய்து வாங்கியுள்ளார்.

ஆர்த்ரா என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்து டிக்கெட்டை குழுவாக வாங்கியுள்ளனர். வழக்கம் போல இந்த முறையும் ஏமாற்றம்தான் கிடைக்க போகிறது என நினைத்தவர் லாட்டரி வாங்கியதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான், லாட்டரி குலுக்கல் நடத்தும் டீமிடம் இருந்து ஆர்த்ராவுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. முதலில் யாரோ தன்னை கலாய்ப்பதற்கு கால் செய்கிறார்கள் என நினைத்து, அதை எடுக்காமல் விட்டு இருக்கிறார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற பிறகு குலுக்கல் விவரத்த்தை பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவருக்கு 25 ஆயிரம் திர்ஹாம் பரிசாக அடித்தது தெரியவந்ததும் துள்ளி குதித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.6.5 லட்சம் அவருக்கு பரிசாக கிடைக்க உள்ளது. லாட்டரியில் பரிசு வென்றது குறித்து ஆர்த்ரா கூறுகையில், இந்த வெற்றியை தனது கணவர் மற்றும் அவருடன் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.

10 பேர் கொண்ட குழுவில் பரிசுத் தொகை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும். அடுத்த குலுக்கலுக்கான டிக்கெட்டையும் ஏற்கனவே வாங்கிவிட்டேன். பரிசுத் தொகையை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எங்கள் குழுவில் உள்ள அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம்.

நீண்ட காலமாக லாட்டரியை அவர்கள் வாங்கி வருகிறார்கள். முதல் முறையாக அவர்க்ளுக்கும் பரிசு அடித்துள்ளது. எங்கள் அனைவருக்கும் இது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது" என்றார். 25 ஆயிரம் திர்ஹாம் பரிசுத்தொகை கொண்ட குலுக்கலில் மேலும் 3 பேருக்கு பரிசு அடித்துள்ளது. ஈராக் மற்றும் பிலிப்பைன்ஸ்சை சேர்ந்தவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல வாராந்திர லாட்டரி குலுக்கல் ஒன்றில் சென்னையை சேர்ந்த சூசைராஜ் பாஸ்கி ராஜன் என்பவருக்கும் பரிசு விழுந்துள்ளது. துபாயில் 30 ஆண்டுகளாக தொழில் செய்து வரும் ராஜன் தொடர்ச்சியாக லாட்டரி வாங்கி வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தனியாக லாட்டரி வாங்கி வரும் ராஜனுக்கு தங்கம் பரிசாக கிடைத்துள்ளது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+