தவெகவுக்கு தாவிய காங்கேயம் நகராட்சி தலைவர்.. திமுகவினர் ஷாக்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சித் தலைவர் சூர்யபிரகாஷ் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், காங்கேயம் நகராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த அவர், திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்திருப்பது காங்கேயம் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், பெருவாரியான இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி தலைவர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி இருந்தது திமுக.
காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக - 10, காங்கிரஸ்- 1, அதிமுக - 4, சுயேச்சை - 3 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து, காங்கயம் நகர்மன்றத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி, திமுக தலைமை அறிவித்திருந்தது.
ஆனால், காங்கேயம் நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹேமலதாவை முன்மொழிய கூட ஆளில்லாமல், 1வது வார்டு திமுக கவுன்சிலர் சூர்யபிரகாஷ் நகராட்சி தலைவராக வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்று தலைவரானார்.
திமுக தலைமை காங்கயம் நகர்மன்றத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு என ஒதுங்கியிருந்த நிலையில், அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதோடு, திமுக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி சூர்யபிரகாஷ் பதவி விலகி, கூட்டணி தர்மத்தைக் காக்குமாறு அன்றைய அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தரப்பு கேட்டுக் கொண்டது. ஆனால் சூர்யபிரகாஷ் பதவி விலகவில்லை. இதனால் அப்போது சூர்யபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதன்பிறகு, கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்துள்ள சூழலில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், காங்கேயம் நகராட்சித் தலைவர் சூர்யபிரகாஷ், தவெகவில் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications
