உதயநிதி 38, கனிமொழி 25.. மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை பட்டியலால் ஸ்டாலின் அதிருப்தி.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களின் பட்டியலில் திருப்தி இல்லாததால் ஸ்டாலின் அதனை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இளைஞரணியை சேர்ந்த 38 பெயர்களும், கனிமொழி தரப்பில் 25 பெயர்களும் இந்த லிஸ்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் சீனியர்கள் பலரும் பதவி இழப்பதால், சிக்கல் உருவாகும் என்று ஸ்டாலின் கருதுவதாக தெரிய வந்துள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு பின் திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. 77 மாவட்டங்களாக இருந்த திமுகவின் அமைப்பு எண்ணிக்கை, 110ஆக உயர்த்தப்பட்டது. இதன்பின் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கின. சில நாட்களுக்கு பின் மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக பேச்சுகள் வந்தன.

Stalin

ஆனால் கடைசி நேரத்தில் ஸ்டாலின் அந்த பட்டியலை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. தேர்தலின் போது திமுகவின் தோல்விக்கு உட்கட்சி பூசலும் ஒரு காரணம் என்பது மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நீண்ட ஆண்டுகளாக மாவட்டச் செயலாளார்களாக இருப்பதால், அங்கு அவர்களை மீறி கட்சி வளரவில்லை என்றும் தெரிய வந்தது.

இதன் காரணமாக மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்தார். இதன் மூலமாக புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, மாவட்டச் செயலாளர்களின் அதிகாரமும் குறையும். இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களுக்கான பரிந்துரை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியில் இருந்து 38 பெயர்களையும், கனிமொழி தரப்பில் அவரின் ஆதரவாளர்கள் 25 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அஞ்சுகம் பூபதி, கோவி.செழியன், முத்துசெல்வம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பட்டியலில் சீனியர்கள் பலரின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.

இதனை அறிந்து கொண்ட ஸ்டாலின், சீனியர்கள் பெயர் இல்லையென்றால் மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டு, அவர்கள் அதிமுக அல்லது தவெக பக்கம் செல்ல வாய்ப்புகள் உருவாகக் கூடும். ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கு தவெக வலைவிரித்துள்ளது. இதனால் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடும் முடிவை இருந்து ஸ்டாலின் நிறுத்திவிட்டதாக தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+