படாரென கதவை சாத்திய வடகொரியா.. அமெரிக்காவால் இனி கிம்மை தொடர்பு கொள்ளவே முடியாது! விஷயம் இதுதான்
வாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்-ஐ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பு கொள்ள மேற்கொண்ட அனைத்து முறைகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இதனால் அமெரிக்காவால் இனி வரக்கூடிய தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது சர்வதேச அளவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு, வழக்கமான தகவல் தொடர்பு வழிகள் மற்றும் தொலைபேசி மூலம் வடகொரிய அதிபரை தொடர்பு கொள்ள டிரம்ப் முயற்சித்தும் வடகொரியா தலைப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. சரி தொலைபேசி தான் வேலைக்கு ஆகவில்லை, எனவே ஆதி காலத்து ஐடியாவான கடிதம் எழுதும் நடைமுறையை டிரமப் மேற்கொண்டார்.

ஒரு A4 பேப்பர் எடுத்து, அதில் மானே! தேனே!! என நுணுக்கி நுணுக்கி எழுதி.. அந்த கடிதத்தை அமெரிக்க அதிகாரிகளிடம் கொடுத்து, வடகொரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க சொல்லியிருக்கிறார். அமெரிக்க அதிகாரிகள், நியூயார்க்கின் மான்ஹான்டனில் உள்ள ஐநாவுக்கான வடகொரிய தூதரகத்திற்கு வெளியே கால் வலிக்க காத்திருந்து.. அந்த வழியாக சென்ற வடகொரியா தூதரிடம் கடிதத்தை கொடுத்தனர்.
ஆனால், அடுத்த நாள் ஐநா கூட்டத்தில்.. அந்த கடிதத்தை பிரித்துக் கூட படிக்காமல் அப்படியே அமெரிக்க பிரதிநிதிகள் முன்பு வைத்துவிட்டு வடகொரிய தூதர் சென்று விட்டார். இப்படியாக டிரம்ப் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பெய்லராக முடிந்தது. சமீபத்தில் சீனா வந்திருந்த டிரம்ப், வடகொரியா அதிபரை சந்திக்க முயற்சித்து இருந்தார். அதுவும் கூட நடக்கவில்லை.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிரம்ப் வடகொரிய அதிபரை சந்தித்தபோது, வடகொரியாவிடம் 20 இலிருந்து 30 அணு ஆயுதங்கள் இருந்தன. ஆனால், இப்போது இந்த ஆயுதங்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்திருக்கிறது. மட்டுமல்ல, அது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதாக அப்கிரேட் செய்யப்பட்டிருக்கிறது.
திட எரிபொருள் மூலம் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கி இருக்கிறது. இந்த வகை ஏவுகணைகளுக்கு.. திரவ எரிபொருள் ஏவுகணையை போல முன்கூட்டியே எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. நடமாடும் தளங்களில் இருந்து இவற்றை உடனடியாக ஏவ முடியும். எனவே, இதை கண்காணிப்பதும் தடுப்பதும் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.
வடகொரியாவை பொருத்தவரை அவர்கள் கேட்பது ரொம்ப சிம்பிளான மேட்டர் தான். தங்களை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் வடகொரியாவை அதிகாரப்பூர்வ அணு ஆயுத நாடாக அங்கீகரித்தால்.. அது சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை சீர்குலைத்து, தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நட்பு நாடுகளையும் அணு ஆயுதங்களை உருவாக்க தூண்டும். எனவேதான் அமெரிக்கா இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
மட்டுமல்ல அது அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஐ.நா சபையும், அமெரிக்காவும் வடகொரியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இப்போது வடகொரியாவை அணு ஆயுத நாடாக ஏற்றுக் கொண்டால் இந்த தடைகள் பலன் கொடுக்காது.
எது எப்படி இந்தாலும்.. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் எந்த உறவும் இல்லை, குறைந்தபட்ச தொடர்பு கூட இல்லை என்பது ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
