திருப்பதி கோயிலுக்கு 121 தங்கம் நன்கொடை தரும் சென்னை தொழிலதிபர்! மொத்த வெல்யூ ரூ.160 கோடி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கையை பக்தர் ஒருவர் வழங்கவுள்ளார். சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான இந்த நகைகளை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் கொடுக்கவுள்ளார். தனி ஒரு நபர் திருப்பதி ஏழுமலையானுக்கு கொடுத்த மிக பெரிய நன்கொடை இதுதான் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்தியாவில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயில். அங்குள்ள ஏழுமலையானை தரிசிக்க உலகெங்கும் இருந்தும் பல்வேறு பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு வந்து செல்கிறார்கள். மேலும், திருப்பதி ஏழுமலையானுக்கு மிக பெரியளவில் நன்கொடைகளையும் அள்ளி தருகிறார்கள்.

Tirupati Temple Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயில்

இதற்கிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சுமார் ரூ.150 முதல் ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்க உள்ளார். மொத்தம் 9 செட்களாக தயாரிக்கப்பட்டுள்ள 43 தங்க ஆபரணங்களை வரும் நவம்பர் 26ம் தேதி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பக்தர் ஒருவர் ஏழுமலையானுக்கு வழங்கும் மிக பெரிய காணிக்கையாக இது இருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரம்மாண்ட காணிக்கையை வழங்கவுள்ள பக்தர் யார் என்ற விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தளவுக்கு தங்க நகைகளை காணிக்கையாக வழங்குவது தொடர்பாக அவர் ஏற்கெனவே தேவஸ்தான நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

121 கிலோ தங்க நகை

ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் கிரீடம், நகைகள், பல அடுக்கு தங்க மாலை உள்ளிட்ட பல்வேறு தங்க ஆபரணங்களை அவர் நன்கொடையாக அளிக்கிறார். இதற்காக மொத்தம் 43 ஆபரணங்கள் 9 செட்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த எடை 121 கிலோ என்றும் மதிப்பு ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

43 ஆபரணங்கள்

இந்த காணிக்கைக்கான ஏற்பாடுகளைப் பல மாதங்களுக்கு முன்பே அந்த பக்தர் தொடங்கியுள்ளார். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு அவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கருவூலத்துக்கு சென்று, ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார். கோயில் நிர்வாகத்திடம் இருந்து தேவையான ஆபரணங்கள் குறித்த தகவல்களை பெற்ற பிறகே, அவர் 45 ஆபரணங்களை தயாரிக்க அவர் ஆர்டர் கொடுத்ததாக தெரிகிறது. தற்போது அதில் 43 ஆபரணங்கள் காணிக்கையாக வழங்க ரெடியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு ஏற்பாடுகள்

இந்த பிரம்மாண்ட காணிக்கையை பெற்று கொள்வதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வரும் நவம்பர் 26ம் தேதி ரங்கநாயகுல மண்டபத்தில் தங்க நகைகளை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பக்தர் ஒருவர் ஏழுமலையானுக்கு இதுவரை வழங்கிய காணிக்கைகளிலேயே இதுவே மிக பெரியது என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். 121 கிலோ தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+