இந்தியாவுக்கே போங்க.. அமெரிக்காவில் 5,235 இந்தியர்களை நாடு கடத்த ரெடியாக இருக்கும் அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறிய கடந்த 20 மாதங்களுக்குள் அமெரிக்காவில் இருந்து 2,349 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 5,235 பேர் நாடு கடத்துவதற்கான தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ready-for-deportation-5-235-indians-held-at-deportation-centres-in-us

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு அவர் தனது நாட்டின் குடியுரிமை கொள்கையை தீவிரப்படுத்தினார். நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்து நாடு கடத்தும் பணியை தொடங்கினார்.

தற்போதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை குறிவைத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியர்களும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக'அமெரிக்கன் கம்யூனிட்டி மீடியா' அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ''2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்ததாக கூறிய 6,111 இந்தியர்களை அந்த நாட்டின் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் 2,349 பேர் நாடு கடத்தப்பட்டனர். அதோடு 5,235 பேர் நாடு கடத்தலுக்கான தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டனர்'' என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் 'ஸ்டாப் ஏஏபிஐ ஹேட்' என்ற அமைப்பு சார்பில், ''நவம்பர் மாத தொடக்கத்தில் அமெரிக்க இடைக்கால தேர்தல் நடந்தது.இந்த தேர்தலுக்குமுன்பாாகவும், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்றும் வகையில் பல்வேறு இட்ங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டனர்? என்ற விவரம் வெளியாகவில்லை. இருப்பினும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களில், இந்தியர்களே அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்'' என கூறியுள்ளார்.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளதாககூறப்படுகிறது. அதன்படி மொத்தம் 43 லட்சம் மெக்சிகோ மக்கள் அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசிக்கலாம்என்று கூறப்படுகிறது. 2 மற்றும் 3வது இடத்தில் 8.5 லட்சம் மக்களுடன் குவாடிமலா என்ற நாடும், எல் சால்வடார் என்ற நாடும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பட்டியலில் 7.75 லட்சம் பேருடன் ஹொண்டுரஸ் நாடும் 4 வது இடத்திலும் உள்ளது. இந்தியர்களை எடுத்து கொண்டால் சுமார் 6.8 லட்சம் பேர் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் இருக்கலாம் என கூறப்படுவதால் நம் நாடு 5வது இடத்தில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+