இடைத்தேர்தல் முடியட்டும்.. அரசியல் மாற்றம் வரும் பாருங்க.. எடப்பாடியை விளாசிய நத்தம் விஸ்வநாதன்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அதிமுகவை ஒருங்கிணைக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றம் தான் வரும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசியல் மாற்றம் நிச்சயமாக வரும் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.

அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிருப்தி அணிக்கு இடையிலான மோதல் வெடித்துள்ளது. கோவையில் வைத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருக்கும் 2 கோடி தொண்டர்களில் ஒருவர் தான் எஸ்பி வேலுமணி என்று பேசி இருந்தார். இதற்கு எஸ்பி வேலுமணி தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருந்தது.

Edappadi Palaniswami

அதுமட்டுமல்லாமல் நேற்றிரவு சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியது.

இதனால் ஜெயலலிதா இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி இருப்பார் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களும், அவரின் அதிருப்தி அணியில் இருப்பவர்களும் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் தான்.

ஆனால் தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருக்கிறார்கள். அவர்கள் அதிமுகவில் இருக்கிறார்களே தவிர, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எங்களை வேண்டுமானாலும் அவர் நீக்கிவிட்டு போகிறார். பிடித்தவர்களை மட்டும் வைத்து கொள்ளட்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடருமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிறது. அதன் முடிவுகளை மக்களும், கட்சிக்காரர்களும், எம்எல்ஏ-க்களும் பார்ப்பார்கள். இதன்பின் அரசியல் மாற்றம் நிச்சயமாக வரும். யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. யாரும் தேவையில்லை என்று முடிவு எடுத்தார் என்றால், எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக ஏமாற்றம் அடைவார். திருந்த மாட்டேன் என்றால், விளைவுகளை அவர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+