லக்கி பாஸ்கராக மாறும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
பொறுமை அவசியம்
7 ஆம் இடத்தில் இருக்கும் சனி தனித்து விடப்பட்ட சனி என்பதால் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் இணக்கமாகவும், பொறுமையாகவும் செல்வது நன்மை பயக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பெரும் செல்வாக்கு, சந்தோஷமும் ஏற்படக்கூடிய காலகட்டம்.
அதிர்ஷ்டம்
ராசி லக்னத்தில் குடும்ப ஸ்தானத்துக்கு சுக்கிரன் போகிறார். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. கடைசி ஒரு மாதமாக ஆரோக்கியத்தில் தொண்டை எரிச்சல், வயிறு உபாதைகள் போன்றவற்றை அனுபவித்து வந்திருப்பவர்களுக்கு அந்த நிலைமைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்ப ஸ்தானத்திற்கு சுக்கிரன், புதன் சேர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்
முன்னேற்றம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் அமைப்பு உள்ளது. எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். பின்புறப் பகுதி வலி, கால் பாதம் தொடர்பான பாதிப்புகள், ரத்த அழுத்தம் போன்ற விஷயத்தில் கவனம் தேவை.
கஷ்டங்கள் தீரும்
இதுவரை இருந்து வந்த பல விதமான கஷ்டங்களும், சங்கடங்களும் நீங்கும். புதிய தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பால் மாற்றங்கள் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மன வருத்தங்கள் நீங்கும். மகாலட்சுமி வழிபாடு மேன்மையைத் தரும். காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக நடக்கும். குடும்பம் அற்புதமாக இருக்கும். நட்பு அருமையாக இருக்கும். வேலையில் ஏற்றம் ஏற்படும். பார்ட்னர்ஷிப்பில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. ஸ்ரீனிவாசப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
