Thulam: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், புதன்..துலாம் ராசிக்கு மெகா ஜாக்பாட் காத்திருக்கு
Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம், குருமங்கள யோகம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நரசிம்மரை வழிபாடு செய்வது யோக பலன்களைத் தரும். முதுக, கால், பாதங்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
மகிழ்ச்சி
தினந்தோறும் உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம் செய்வது மேன்மையைத் தரும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். எல்லா விஷயங்களிலும் பெரும் வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். செல்வாக்குகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சுக்கிரன், புதன்
சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது பெரிய யோகத்தைக் கொடுக்கும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். சந்தோஷம், பணம், மகிழ்ச்சி, ஆடம்பரம், சொத்து சேரக்கூடிய யோகம் உண்டாகும். மன ரீதியான, உளவியல் ரீதியான பாதிப்புகள் நிவர்த்தியாகும். பணம் பலவகைகளில் வந்து சேரும். சகலவித விஷயங்களும் கைகூடக் கூடிய யோகம் ஏற்படும்.
கவனம்
அற்புதமான யோகங்கள் உண்டாகும். லோன் அப்ளை செய்பவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு செய்வது நல்லது. வேலையில் சிறு சிறு குடைச்சல்கள் இருக்கும். வேலைக்காரர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பிடித்த விஷயங்களை நேர்மையாகப் பேசக்கூடிய அமைப்பு ஏற்படும். 25, 26 ஆகிய இரு நாட்கள் செலவுகள், அலைச்சல்கள் இருக்கும்.
வழிபாடு
தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண ரீதியான பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பெருமாள் வழிபாடு, பார்த்தசாரதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் மேன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
