ஸ்ட்ரேட்டஜிக் சைலன்ஸ்ஸில் கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர்! எம்எல்ஏ மீது நடவடிக்கை! முன்னாள் டிஜிபி ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது? சட்டம் ஒழுங்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என முன்னாள் டிஜிபி ரவி பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் செஞ்சி சிறுமி விவகாரம், கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் குறித்தும் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தவெகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதை எனது சர்வேயை வைத்து நான் சொன்னேன். தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகின்றன. இது அவர்களுக்கு Probation Period. அதாவது கற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நேரம்! இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Ex DGP Ravi

போக போக அவர்களது செயல்பாடு எப்படியிருக்கிறது என்பதை ஆய்வு செய்வோம். காவல் துறை அதிகாரிகளின் பார்வையில் சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு என்றால் பொதுமக்கள் வெளியே நடமாட அஞ்ச வேண்டும். பெண்கள் வெளியே வருவதற்கே அஞ்ச வேண்டும். இந்த மாதிரியான இருக்கமான சூழல்வரும் போதுதான் சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சுன்னு சொல்வாங்க.

சட்டம் ஒழுங்கு

காவல் துறையில் ஒரு சில இடங்களில் பல விஷயங்கள் நடக்கும். கொலை என்பது ஆதாயத்திற்காக கொலை செய்வது, கொள்ளையடிப்பதற்காக கொலை செய்வது போன்றவை நடந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு கெட்டு போனதா அர்த்தம்!

கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டை, குடிபோதையில் நண்பர்களிடையே நடக்கும் சண்டைகளால் ஏற்படும் கொலைகள் குறித்தும் டிஜிபி புள்ளிவிவரங்களை சொல்லியிருக்கிறார். கடந்த ஆட்சியில் நடந்த கொலைகள் டிஜிபி ஒப்பீடு செய்து இப்போது குறைந்திருக்கிறது என சொல்லியிருக்கிறாரு. அவர் சொல்லும் புள்ளி விவரங்களை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

செஞ்சி சிறுமி காணவில்லை

செஞ்சி சிறுமி காணாமல் போயிருக்கும் விவகாரத்தில் அவரை விரைவில் கண்டுபிடித்துவிடலாம். நிச்சயமாக இது இன்சைடர் ஜாப் மாதிரிதான் தெரிகிறது. உள்ள இருக்கிறவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அதை பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்திக்கிட்டு இருக்கிறார்கள். அந்த சிறுமியை நிச்சயமாக கண்டுபிடித்து விடுவார்கள்.

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர்

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு எம்எல்ஏ பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சம்பந்தப்பட்ட ஆட்சியர் அமைதியாக இருக்கிறார், அவரிடம் விசாரித்தால்தான் அது குறித்து தெரியும். ஒரு வேளை உண்மையாக இருந்தால் குறுஞ்செய்தி அனுப்பிய நபர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக ரவி தெரிவித்துள்ளார்.

யார் இந்த ரவி?

1991 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரவி, தாம்பரம் காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை அவர் எடுத்திருந்தார். அதில் 2440 ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளின் உதவியுடன் 2.44 லட்சம் வாக்காளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை ஆய்வு செய்ததில் விஜய்யின் தவெகவுக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்கும். மொத்தம் உள்ள இடங்களில் 121 இடங்களை தவெக கைப்பற்றும் என ரவி தெரிவித்திருந்தார்.

அதிமுக, திமுக

காலம் காலமாக அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கூட தற்போது தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். ஏன் விஜய்க்கு வாக்களித்தீர்கள் என கேட்ட போது தனது வீட்டில் பேரக் குழந்தைகள், மகன்கள், மகள்கள் விஜய்க்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியதால் வாக்களித்ததாக தெரிவித்தனர் என ரவி தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+