இருட்டுலேயே இருங்க.. தெருவிளக்குகளை கழற்றி சென்ற பாஜக வேட்பாளர்.. உள்ளாட்சி தேர்தலில் தோற்ற பின் அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்ததால் அந்த வார்டில் உள்ள தெருவிளக்குகள் அகற்றப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. தனது மனைவிக்கு ஓட்டுப்போடாத மக்களை பழிவாங்கும் வகையில் இந்த செயலில் பாஜக எம்எல்ஏவின் தனி உதவியாளர் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

rajasthan-bjp-candidate-removes-street-lamps-after-poll-defeat

ராஜஸ்தானில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன்லால் சர்மா செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியினர் அதிகமான உள்ளாட்சிகளை கைப்பற்றி உள்ளனர்.

இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் தோற்றதில் விரக்தியடைந்த பாஜக வேட்பாளரின் கணவர் செய்த செயல் தற்போது கடும் விமர்சனத்துக்கு .உள்ளாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம் பீப்லு பஞ்சாயத்துக்குட்பட்ட 4வது வார்டில் பாஜக சார்பில் பிரியங்கா சர்மா என்பவர் வேட்பாளராக நின்றார். இவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. தோல்வியடைந்தார். இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து அந்த வார்டில் உள்ள தெருவிளக்குகள் அகற்றப்பட்டன.

மின்வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு மின்கம்பத்திலும் ஏறி மின்விளக்குகளை அகற்றினர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த ஊழியர்கள், ''இந்த தெருவிளக்குகள் எல்லாம் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ளது'' எனக்கூறினர்.

கும்ஹாரோன் கி தானி, பெகம்புரா, ஹனிப்கஞ்ச் மற்றும் பிஜால்புரா உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 50 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுவதாக கூறினார். ஆனால் கிராம மக்கள் எதிர்ப்பால் கும்ஹாரோன் கி தானி பகுதியில் உள்ள 10 விளக்குகள் மட்டுமே அகற்றப்பட்டன. மற்ற பணிகள் கைவிடப்பட்டன.

இதற்கிடையே தான் கிராம மக்கள் பரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். உண்மையில் இதன் பின்னணியில் தோற்றுப்போன பாஜக வேட்பாளர் பிரியங்கா சர்மாவின் கணவர் உள்ளதாக கிராமத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபற்றி கிராமt மக்கள் கூறியதாவது:

''பாஜக வேட்பாளர் பிரியங்கா சர்மாவின் கணவர் பெயர் அலோக் சர்மா. அலோக் சர்மா நிவாய் சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏ ராம் சகாய் என்பவர் தனி உதவியாளராக உள்ளார். தனது மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அலோக் சர்மா தெருவிளக்குகளை பொருத்தினார். தனது மனைவிக்கு ஆதரவாக வாக்கு கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. மனைவி பிரியங்கா சர்மா தோல்வியடைந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் தெருவிளக்குகளை கழற்றி உள்ளார். இந்த விளக்குகளை மின்வாரிய ஊழியர்கள் கழற்றினாலும் கூட பின்னணியில் அசோக் சர்மாவின் தூண்டுதல் தான் இருக்கிறது'' என குற்றம்சாட்டினர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை நிவாய் எம்எல்ஏ ராம் சகாய் வர்மா முற்றிலமாக பறக்கணித்துள்ளார். இதுபற்றி அவர், '' தெருவிளக்குகள் அகற்றப்பட்டதற்கும் பாஜக வேட்பாளர் பிரியங்கா சர்மா தோற்கடிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். மின்சார கட்டணம் விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வான உறுப்பினர்கள் இதனை செய்வதாக கூறியுள்ளனர்'' என்றார்.

இதுபற்றி மின்வாரியம் சார்பில், ''உரிய அனுமதியின்றி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் அதனை கழற்றி உள்ளோம். இதனை செய்தது யார்? என விசாரித்து வருகிறோம்'' என கூறியுள்ளது. இதற்கிடையே தான் கிராமத்தில் மின்விளக்குகளை அகற்றுவது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அலோக் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+