என்விடியா சர்ச்சை.. கள்ள உறவு ஆலிஸ் வெறும் முகம் தான்.. பின்னணியில் சீன தொழிலதிபர்! வெளியான தகவல்
சிங்கப்பூர்: என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங்குடன் கள்ள உறவில் இருந்தவர் ஆலிஸ் ஹுவாங். இருப்பினும், சீனாவுக்கு தடை செய்யப்பட்ட ஏஐ சிப்களை கடத்தியதாக விவகாரத்தில் ஆலிஸ் வெறும் முகம்தான் என்றும் அவர் பின்னணியில் சீன தொழிலதிபர் ஒருவர் இருப்பதாகவும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட மெகாஸ்பீட் நிறுவனம், அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி என்விடியாவின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு சிப்களை சீனாவுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. என்விடியா சிஇஓவாக இருந்த ஜென்சன் உடன் ஆலிஸ் ஹுவாங் கள்ள உறவில் இருந்ததாகவும் அதன் மூலமாகவே அவர் சிப்களை பெற்றதாகவும் கூறப்பட்டது.

பின்னணியில் சீன தொழிலதிபர்
இருப்பினும், ஆலிஸ் ஹுவாங் வெறும் முகம் தான் என்றும் கடத்தலின் பின்னணியில் வேறு ஒரு தொழிலதிபர் இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நெட்வொர்க்கில் 52 வயதான சீன தொழிலதிபர் லி மிங் என்பவர் பின்னணியில் இருந்து இயக்கியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
மெகாஸ்பீட் நிறுவனத்தில் ஆலிஸ் ஹுவாங் மூத்த நிர்வாக பொறுப்பில் இருந்தாலும், முக்கியமான வணிக முடிவுகள் உள்ளிட்ட நிர்வாக முடிவுகளை எடுப்பதில் லி மிங் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது. என்விடியா சிப்களை வர்த்தகம் செய்த மேலும் சில நிறுவனங்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்விடியா சிப்கள்
ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரியில் என்விடியா சிப்கள் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டர் சர்வர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பியதாக எழுந்த மோசடி புகாரில் லி மிங் மீது சிங்கப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்திற்காக சிப்களை வாங்குவதாக சொல்லிவிட்டு, அதை வேறு நிறுவனங்களுக்கு அனுப்பியதாக அவர் ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அதாவது அந்த சர்வர்கள் முதலில் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அடையாளம் வெளியிடப்படாத வேறு ஒரு நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தரப்பு தெரிவித்தது. இந்த வழக்குகளில் தற்போது ஜாமீனில் உள்ள லி மிங், சிங்கப்பூரில் சீன தூதரகத்துக்கு அருகிலுள்ள சொகுசு வில்லாவில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
சிப் தடை
ஆலிஸ் ஹுவாங் மற்றும் அவரது கணவர் காங் வெய்யுடன் லி மிங்கிற்கு நீண்டகாலமாக பிஸ்னஸ் தொடர்பு இருந்துள்ளது. சீனாவுக்கு அதிநவீன என்விடியா சிப்கள் ஏற்றுமதி செய்வதற்கு பைடன் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்ததால் சீன நிறுவனங்களுக்கு ஏஐ சிப்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த மூன்று பேரும் இணைந்து, சீன நிறுவனங்களுக்கு மேம்பட்ட திறன்களை கொண்ட சிப்களை எடுத்து வர ஒரு நெட்வொர்க்கை உருவாக்கியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
மறுப்பு
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி மெகாஸ்பீட் நிறுவனம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சிப்களை சீனாவுக்கு கொண்டு சென்றது என்பதே பிரதான குற்றச்சாட்டு இது தொடர்பாக அமெரிக்கா, சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெகாமீஸ்ட் நிறுவனம், தான் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றியதாக கூறியிருந்தது. இந்தச் சூழலில் தான் ல் ஆலிஸ் வெறும் முகம்தான் என்றும் அவர் பின்னணியில் சீன தொழிலதிபர் லி மிங் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
