திருச்சி துறையூர் அருகே ஆம்னி வேன் மரத்தில் மோதி விபத்து! 5 பேர் பலி! மேலும் 3 பேர் படுகாயம்
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் அதே இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ராயந்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். அந்த பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். தனது நண்பர்கள் 8 பேருடன் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் நாமக்கல்லில் நடந்த திருவிழாவிற்கு சென்றார்.

விழா முடிந்து இன்று மாலை 4 மணியளவில் துறையூர் வழியாக அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருச்சி ஜம்புநாதபுரம் அருகே ஆம்னி வேன் வந்து கொண்டிருந்தது. இடதுபுறமாக திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக பாய்ந்து சாலையில் இருந்த மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்ச்சை பலனின்றி இருவர் இறந்துவிட்டனர். தற்போது ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜம்புநாதபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர், சுயநினைவு திரும்பி இயல்பு நிலைக்கு வந்தால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
தஞ்சையில் 3 பேர் பலி
தஞ்சை மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்த பெனாசிர் பேகம் (26), இவருக்கு முகமது ஜாவித் (12), முகமது ஜாசித் (10), முகமது ஹாலித் (5) ஆகிய 3 மகன்கள். இந்த நிலையில் இன்று தனது 3 மகன்களையும் ஒரே பைக்கில் அழைத்துக் கொண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தார்.
திருவையாறு- தஞ்சை சாலையில் அம்மன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, இவர்களது பைக் மீது மோதியதில் கீழே விழுந்த 4 பேரும் காயமடைந்தனர். அவர்களில் பெனாசிர் பேகம், முகமது ஜாசித், முகமது ஹாலித் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இன்று ஒரே நாளில் இரு வேறு சம்பவங்களில் 10 பேர் பலியாகிவிட்டனர்.




Click it and Unblock the Notifications
