அண்ணாமலை இன்னமும் சங்கி தான்..விஜய் ஆட்சிக்கு 100-க்கு 90 மதிப்பெண்கள்! அதிரடியாகப் பேசிய மாணிக்கம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த முடிவு சரியானது எனவும், முதல்வர் விஜய் மீது முழு நம்பிக்கை உள்ளது.. தவெக அரசின் 6 மாத ஆட்சிக்கு 100-க்கு 90 மதிப்பெண்கள் வழங்குவேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மேலும், அண்ணாமலையும் சங்கிதான்... என்னைப் பற்றி பேச அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், அப்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு நல்ல முடிவு. முதல்வர் விஜய் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது தமிழக அரசு சரியான முடிவை எடுத்துள்ளது.

மாணிக்கம் தாகூர்
காங்கிரஸில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் மாணிக்கம் தாகூர் இணைந்துவிடலாம் என அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக, இந்து முன்னணி மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒரே பாணியில் பேசி வருகின்றனர். அண்ணாமலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையைச் சார்ந்தவர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். 00 ஆண்டுகளாகத் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
அண்ணாமலை
நான் காங்கிரஸ் கொள்கைக்காகச் சாகும் வரை காங்கிரஸில்தான் இருப்பேன். அண்ணாமலையைப் போல் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சீன் போட்டுக் கொண்டு, திமுகவுடன் சைடு டீலிங் பேசிவிட்டு, அந்தப் பிழைப்பை நான் பிழைக்கவில்லை. நான் மானத்துடன் வாழ்கிறேன். தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு அளிப்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக என்னுடைய வேலை.
முருகன் அரசியல்
முதல்வர் ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். முதல்வர் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். அண்ணாமலை ஒரு வேஸ்ட் பீஸ். அண்ணாமலைக்கு தன்னைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் கிடையாது. தான் பல கட்சிகளுக்குத் தாவும் பரந்தாமன் கிடையாது. ஊர் மக்களின் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
பாஜக
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லைக் காட்டி அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறினால், விமான நிலையம் முன்புகூட ஒரு கல்லைக் காட்டி தீபம் ஏற்றச் சொல்வார்கள். முருகன் அனைத்து மதத்தினரும், சாதியினரும் நம்பிக்கையுடன் வழிபடும் தெய்வம். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்வதைப் போல, தமிழகத்தில் முருகனை வைத்து பாஜகவும் இந்து முன்னணியும் அரசியல் செய்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு
தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. பக்தர்கள் நல்லபடியாகத் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்யவே விரும்புவார்கள். தேவையில்லாத புரளிகளைக் கிளப்பி முருகனை வைத்து அரசியல் செய்கிறது." எனக் கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
