நான் அடிச்சு தூக்குறேன்.. அதிரடி ஆக்‌ஷனுக்கு ரெடியான எடப்பாடி! இடைத்தேர்தலில் பலே ப்ளான்..பலிக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிமுகவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் உள்ளிட்ட சீனியர்கள் தனக்கு ஒத்துழைப்பு தராமல் இருக்கும் நிலையில், இடைத்தேர்தலில் வழக்கம் போல் அவர்களை புறக்கணித்துவிட்டு சண்டை செய்ய தயாராகி வருகிறாராம்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை அடுத்தகட்ட பரபரப்பு என்றால் அது இடைத்தேர்தல் தான். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து விட்டது. அதற்கு பிறகு நடந்த தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வென்று விட்டது.

இதற்கிடையே கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி எஸ் பாபு மரணம் அடைந்த நிலையில் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் மொத்தமாக 6 தொகுதிகள் காலியாக இருக்கிறது.

Edappadi Palaniswami AIADMK By Election

இடைத்தேர்தல்

ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு பின்னர் கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அந்த தொகுதிகள் காலியாக இருக்கிறது.

கொளத்தூர் தொகுதி

தற்போது கொளத்தூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் நடக்கலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

திமுக

தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் வழக்கம் போல் வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறது. நாம் தமிழர் சீமானும் களமிறங்குகிறார். திமுகவும் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டதாக சொல்லப்படும் நிலையில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

எடப்பாடி பழனிசாமி

அதாவது தற்போது இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 6 தொகுதிகளில் கொளத்தூர், திருச்சி கிழக்கு தவிர்த்து நான்கு தொகுதிகளில் அதிமுக தான் வென்றது. அந்த தொகுதிகளில் விஜய் அலையையும் தாண்டி அதிமுக வேட்பாளர்கள் வென்றனர். தற்போது அவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்ட நிலையில் வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக இந்த தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்துக்காவது வரவேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம்.

வலுவான வேட்பாளர்கள்

அதே நேரத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களான 'விஜயபாஸ்கர்கள்' அந்த தொகுதிகளில் போட்டியிட இருக்கும் நிலையில் வலுவான வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி தேடி வருகிறாராம். பலர் செலவுக்கு பயந்து தயங்கும் நிலையில் சொந்த செலவு செய்தாவது அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை போட்டியிட வைக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளாராம்.

கொங்கு மண்டலம்

அது மட்டும் இல்லாமல் கடந்த தேர்தலில் சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சீனியர்கள் தேர்தல் வேலை பார்க்காத நிலையில் தற்போது அவர்களை புறக்கணிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்கும் நிலையில் கேபி முனுசாமி உள்ளிட்ட தலைவர்களை நம்பாமல் தானே களம் இறங்கி வேலை செய்ய எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர்.

அதிமுக

அதே நேரத்தில் ஏற்கனவே அதிமுக மோசமான நிலையில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி களமிறங்கினால் ஓரளவு நம்பிக்கை கிடைக்கும்.. இல்லையேல் ஒட்டுமொத்தமாக காலிதான் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+