6.3 கிலோ தங்க நகையுடன் உலா வந்த நபர்.. யார் இந்த பிரேம் குமார் சிங்? கவனம் ஈர்த்த நபரின்பின்னணி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பீகாரை சேர்ந்த பிரேம் குமார் சிங் என்பவர் ரூ.10 கோடி மதிப்பிலான 6 கிலோ 300 கிராம் எடையிலான தங்கநகையை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்க் மாவட்டம் குந்தா எனும் பகுதியில் ராஜா பையா என்பவர் மதம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது யாரெல்லாம் பிரேம் குமார் சிங் தான். ஏனென்றால் இவர் அதிகளவில் தங்க நகைகள் அணிந்திருந்தார்.
குறிப்பாக கழுத்தில் பெரிய பெரிய தங்க சங்கிலிகளை அணிந்திருந்தார். அதேபோல் விரல்களில் மோதிரங்கள், கைகளில் கைச்செயின் உள்ளிட்டவற்றை அணிந்திருந்தார். மொத்தம் அவர் 6 கிலோம 300 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அணிந்திருந்து சென்றிருந்தார். இதன் மதிப்பு ரூ.10 கோடியாகும்.
இதனால் பொதுமக்களின் பார்வை அனைத்தும் பிரேம் குமார் சிங் பக்கம் திரும்பியது. பலரும் அவரிடம் வந்து செல்பி மற்றும் போட்டோக்களை எடுத்து கொண்டனர். பிரேம் குமார் சிங் சிறுவயது முதலே அதிகளவில் தங்கநகை அணியும் வழக்கம் கொண்டவர். இவர் பீகாரை சேர்ந்தவர். அதோடு 'பீகார் கோல்ட்மேன்' என்ற புனைப்பெயரையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
