Optical illusion: நீங்க ஜீனியஸா? படத்தில் "1"ஆம் நம்பர் எங்கே இருக்கு? 8 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (Optical illusion) படத்தில் "1" என்ற எண் எங்கே உள்ளது? என கண்டுபிடிக்க வேண்டும். படத்தை பார்த்த உடன் 1 என்ற எண்ணை தவிர மற்ற எண்கள் எல்லாம் நம் கண்களுக்கு டக்கென படும்படி தெரியும். ஆனால் நன்கு உற்று பார்த்தால் தான், "1" என்ற எண் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் வகையில் இந்த படம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களால் 8 செகண்டில் கண்டுபிடிக்க முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் அவ்வப்போது டிரெண்ட் ஆகி வருகின்றன. இருப்பதை இல்லாது போலவும், இல்லாததை இருப்பது போன்றும் நம் கண்களை நம்ப வைக்கும் படங்களையே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்று கூறுவர்.

8 செகண்ட் டைம்!
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நம் கண்களுக்கு எளிதில் புலப்படாத எண் ஒன்று இருக்கிறது. நிறைய எண்கள் இருந்தாலும் ஒரு எண் மட்டும் பார்த்த உடனே நம் கண்களுக்கு தெரியாதவாறு வைக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணை நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கிறீர்கள் என்பதே டாஸ்க்.
என்ன போட்டிக்கு தயாரா? உங்களுக்காக 8 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்கு விடையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மீன் போன்ற பிளாக் அண்ட் ஒயிட் நிற படத்தில், நிறைய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, இரண்டு, மூன்று என 10 வரையிலான எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
"1" என்ற எண் எங்கே இருக்கிறது?
இதில் கேள்வி என்ன என்றால், "1" என்ற எண் எங்கே இருக்கிறது என்பது தான். இந்த எண் எங்கே உள்ளது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. என்ன ரெடியா.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1.. 2.. 3.... 8. ஓக்கே டைம் ஓவர். யாரெல்லாம் விடையை கண்டுபிடித்தீர்களோ உங்களுக்கு பாராட்டுக்கள்.
படத்தை பார்த்த உடன் 1 என்ற எண்ணை தவிர மற்ற எண்கள் எல்லாம் நம் கண்களுக்கு டக்கென படும்படி உள்ளது. குறிப்பாக 3, 6, 0 போன்ற எண்கள் எளிதில் நம் பார்வைக்கு புலப்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 1 என்ற எண் மட்டுமே தேடி தேடி கண்டுபிடிக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் டிரிக்ஸ்.
இதுதான் விடை
இந்த படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிப்பவர்கள் பொதுவாக லைஃபிலும் ஹீரோவாக இருப்பார்கள். மிகவும் கஷ்டமான வேலையை கூட டக்கென முடிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். நீங்களும் இதற்கான விடையை 8 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால் நீங்களும் ஹீரோ தான்.
ஆனால் ஒன்று என்ற எண் படத்தில் எங்கே இருக்கிறது என தெரியாதவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது ஒரு ஜாலியான விளையாட்டு தான்..

1 என்ற எண் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு இங்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
