நான் தான் கிடைச்சனா..போயா அங்குட்டு! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்த கிம் ஜாங்! வெளியான பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சபட்சமாக டொனால்ட் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை கூட கண்டுகொள்ளாமல் அதனை அமெரிக்க அதிகாரிகளிடமே வடகொரிய தூதர் திருப்பி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. அணு ஆயுதத் திட்டங்களை கைவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கோரிக்கை.

Donald Trump Kim Jong Un North Korea

ஆனால் இந்த விவகாரத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து பிடிவாதமாகவே இருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கிம் ஜாங் உன்னுடன் பேசுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு வழிகள் மூலம் தொடர்பு கொள்ளும் என்றும் வடகொரிய அதிபர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.

இதை அடுத்து டிரம்ப் , கிம் ஜாங் உன்னுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார். அந்த கடிதத்தை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சபையின் வடகொரிய அலுவலகம் மூலம் ஒப்படைக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி அமெரிக்க அதிகாரிகள் சிலர் வடகொரியா அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த வடகொரிய தூதர் ஒரு வருடம் ட்ரம்ப் எழுதிய கடிதத்தை வழங்கி உள்ளனர்.

ஆனால், அந்த கடிதத்தை வடகொரிய தூதர் திறந்து கூட பார்க்கவில்லை என்றும் பின்னர் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது அமெரிக்க பிரதிநிதி முன்னிலையில் அந்த கடிதத்தை வைத்து விட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது முதல் அதிபர் பதவிக்காலத்தில் கிம் ஜாங் உன்னை மூன்று முறை நேரில் சந்தித்து பேசி உள்ளார் டிரம்ப்.

அப்போது, வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த 2018 இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வடகொரியாவின் முக்கிய அணுசக்தி மையமான யோங்பியான் வளாகத்தில் சில அணுசக்தி வசதிகளை மூட்கும் முன் வந்தார் உன்.

அதற்கு பதிலாக வடகொரியா மீது ஐநா விதித்த தடைகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இதை அடுத்து தான் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.

மேலும், சமீபத்தில் ஆசிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டபோதும் கிம் ஜாங் உன்னைச் சந்திக்க டிரம்ப் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் இரு தரப்பினரும் சந்திப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், கிம் ஜாங் உன் சில நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், அவற்றை அமெரிக்கா ஏற்க முடியாததால் சந்திப்பு தொடர்பான முயற்சி முன்னேறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+