திருப்பரங்குன்றம் விவகாரம்.. இஸ்லாமிய அமைப்புகள் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை
சென்னை: உச்ச நீதிமன்றம் வழங்கியது இறுதி தீர்ப்பு அல்ல. 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இறுதி தீர்ப்பு என்றால், அதற்கு மேலே மறு சீராய்வு என்ற வழிமுறைகள் உள்ளன. தீபம் ஏற்றுவது ஆகம விதிகளின் படி பொருத்தமான இடம் என்றால் திருவண்ணாமலை மட்டும்தான். அங்கு தீபம் ஏற்றப்படுகிறது. உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது புதிய நடைமுறைதான் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்த்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். ஜவஹிருல்லா, நவாஸ் கனி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். திருப்பரங்குன்றம் தர்கா நிர்வாகத்தை சேர்ந்தவர் கூறியதாவது:-
"தீபம் ஏற்றுவது எங்களுடைய பிரச்சினை கிடையாது. அனைவரும் என்ன சொன்னார்கள் என்றால் உச்சி பிள்ளையார் கோவிலில்தான் ஏற்றுகிறார்கள். அதை கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

ஜவாஹிருல்லா பேசியதாவது:-
பாஜகவின் முக்கிய நிர்வாகியாக உள்ள ஹெச். ராஜா பேட்டியை நான் மேற்கொள் காட்டுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அயோத்தி திருப்பரங்குன்றம் என்று சொன்னார். அனைத்து தரப்பு மக்களும் நல்லிணக்கத்தோடு, பாரம்பரியத்தோடு வாழக்கூடிய பூமியாக பாரம்பரியமாக உள்ளது. நாகை எம்.எல்.ஏவாக நான் உள்ளேன். என்னுடைய தொகுதியிதான் நாகூர் தர்கா உள்ளது. முஸ்லீம்களை விட இந்துக்கள்தான் அதிகமாக நாகூர் தர்காவுக்கு வரக்கூடிய காட்சியை பார்க்கலாம்.
இப்படியான சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்பதுதான், பாஜகவினுடைய நோக்கம். அதைத்தான் ஹெச். ராஜா, தமிழ்நாட்டின் அயோத்தி திருப்பரங்குன்றம் என்று சொல்கிறார். திமுகவாக இருக்கட்டும், தவெகவாக இருக்கட்டும் அனைவரும் சமூக நல்லிணக்கம் நிலை நாட்ட வேண்டும் என்று விரும்புகிறோம். அப்படியான ஒரு நிலையில், இது மாதிரியான வெறியை ஊட்டி அதன் மூலமாக சமூக பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அதற்கு திருப்பரங்குன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
இல்லாத நடைமுறையை திணிக்கிறீர்கள்
உச்ச நீதிமன்றம் வழங்கியது இறுதி தீர்ப்பு அல்ல. 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இறுதி தீர்ப்பு என்றால், அதற்கு மேலே மறு சீராய்வு என்ற வழிமுறைகள் உள்ளன. எனவே இது இறுதி தீர்ப்பு இல்லை. தீபம் ஏற்றுவது ஆகம விதிகளின் படி பொருத்தமான இடம் என்றால் திருவண்ணாமலை மட்டும்தான். அங்கு தீபம் ஏற்றப்படுகிறது. உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது புதிய நடைமுறைதான்.
அதனால், இல்லாத நடைமுறையை திணிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் சந்தேகமாக உள்ளது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. மக்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தி சமூக பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் நீங்கள் கனவு காணக்கூடிய ஆட்சி இங்கே வரவேண்டும் என நினைக்கிறது. அந்த கனவு ஒருபோதும் பலிக்காது.. அரசுக்கு நாளை கோரிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும்" என்று கூறினார்.
நவாஸ்கனி கூறியதாவது:-
"உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்த போது, இந்து அறநிலையத்துறை சார்பாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் சரியான முறையில் வாதாடி இருக்கிறார்கள். தீர்ப்பு வந்த பிறகும் சீராய்வு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். எனவே அரசு இதில் சரியான நடவடிக்கை எடுத்து இருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். வக்பு சார்பாக மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடியிருக்கிறோம். அரசு தரப்பிலும் மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து வாதாடியிருக்கிறோம்" என்றார்.




Click it and Unblock the Notifications
