டம்மி CM.. சோப்ளாங்கி அரசு! ஆட்சிக்கு வந்த மறுநாளே Fuse பிடிங்கி விட்டார்கள்! உதயநிதி ஸ்டாலின் சாடல்
சென்னை: கடந்த ஆட்சியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 'We will face the consequences" என்று சொன்னார் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மத நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் பாதுகாத்தோம். நாம் உறுதியாக இருந்ததால், கலவரம் செய்ய நினைத்த சங்கி கூட்டத்தின் திட்டத்தை முறியடித்தோம். ஆனால் இன்று இந்த சோப்ளாங்கி அரசு, உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதம் செய்யாமல் கோட்டை விட்டுள்ளது என தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உருவாக்கியுள்ள குடியரசு இதழின் முழு தொகுப்பை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," சட்டமன்றத்தில் பேசுவதற்கும் இங்கு பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இங்கிருப்பவர்கள் எல்லாரும் நன்கு படித்தவர்கள், அறிஞர்கள், அறிவாளிகள், பகுத்தறிவு உள்ளவர்கள். உங்களுக்கு நான் பேசுவது புரியும்.

உதயநிதி ஸ்டாலின்
ஆனால் சட்டமன்றத்தில்... எனவே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று என்னை அழைப்பது பெருமை என்று சொல்வதை விட, பொறுமை என்றே சொல்லலாம். இன்று நிறைய பேர் பெரியாரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தலாம். பொதுவாக நாம் பரீட்சைக்கு படிக்கும்போது, கஷ்டமான கேள்விகளை எல்லாம் விட்டுவிடுவோம்.
விஜய் அரசு
அதே போல் தான் நம் டம்மி CM, பெரியாரை கொள்கை தலைவர் என்று Photo போட்டுக்கொள்வார். ஆனால் அவருக்கு ஏற்றாற்போல் சில கொள்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவையை விட்டுவிடுவார். அவை என்ன என்று கேட்டால் கூட அவருக்கு தெரியாது. செஞ்சியில் காணாமல் போன சிறுமி 40 நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடே அந்த சிறுமிக்கு என்ன ஆனது என்று கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் விஜயோ, இதுவரை இந்த சம்பவம் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
டம்மி முதலமைச்சர்
குழந்தையை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை தேடுவதை விட்டுவிட்டு, காவல் நிலையத்தில் யாகம் வளர்த்து வருகிறார்கள். இவர் தான் பெரியாரிஸ்ட்! நம் முதலமைச்சர் எந்த மாநிலத்துக்கு போனாலும் முதலில் போவது, அங்குள்ள கோயிலுக்கு தான். நாம் போலி சாமியார் பார்த்திருப்போம், ஆனால் போலி பெரியாரிஸ்ட்டை பார்த்திருப்போமா... போலி முதலமைச்சரை பார்த்திருப்போமா... இப்போது அதை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த மறுநாளே Fuse பிடிங்கி விட்டார்கள். எல்லா இடங்களிலும் மின்வெட்டு பிரச்சினை உருவாகியது. 6 மாதத்தில் சுமார் 700 கொலைகள். ஆளுங்கட்சி நிர்வாகிகள் போட்டிபோட்டுக்கொண்டு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 'We will face the consequences" என்று சொன்னார் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
உச்சநீதிமன்றம்
மத நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் பாதுகாத்தோம். நாம் உறுதியாக இருந்ததால், கலவரம் செய்ய நினைத்த சங்கி கூட்டத்தின் திட்டத்தை முறியடித்தோம். ஆனால் இன்று இந்த சோப்ளாங்கி அரசு, உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதம் செய்யாமல் கோட்டை விட்டுள்ளது" என்றார்.




Click it and Unblock the Notifications
