போலி சாமியார் போல்.. முதல்வர் விஜய் போலி பெரியாரிஸ்ட்.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன விஷயம்!
சென்னை: போலி சாமியாரை போல் முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பெரியாரை கொள்கைத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு, எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் கோயிலுக்கு தான் செல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக குடி அரசு இதழின் முழு தொகுப்பு வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடி அரசு இதழின் முழு தொகுப்பையும் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சில பேர் கொள்கை தலைவராக பெரியார் பேரை வைத்து கொள்ளலாம்.

அவர் புகைப்படங்களை வைத்து கொள்ளலாம். நாம் தேர்வுக்கு படிக்கும் போது கஷ்டமான கேள்விகளை சாய்ஸில் விட்டுவிடுவோம். அதுபோல் டம்மி முதல்வர் பெரியாரின் சில கொள்கையை ஆப்ஷனில் வைத்துவிட்டு, சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன் என்பார். அப்படி என்ன கொள்கை என்று கேட்டால் தெரியாது. ஆனால் பெரியாரின் வாரிசு என்று மட்டும் சொல்லி கொள்வார்.
செஞ்சியில் ஒரு சிறுமியை 40 நாட்களுக்கும் மேலாக தேடி கொண்டிருக்கிறார்கள். அந்த சிறுமியின் பெற்றோர் தவித்து கொண்டிருக்கின்றனர். ஊரே சோகமாக உளது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மக்களும் அந்த சிறுமிக்கு என்ன ஆனது என்று பதற்றத்தில் உள்ளோம். காவல்துறையின் வேலை அந்த சிறுமியை கண்டு பிடிப்பது. இதனை அனைவரும் வலியுறுத்தி இருக்கிறோம்.
ஆனால் அந்த காவல்துறைக்கு பொறுப்பேற்க கூடிய முதல்வர் விஜய் இதுவரை வாயை திறந்து இதைப் பற்றி பேசி இருப்பாரா என்று பார்த்தால், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. குழந்தையை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை, காவல் நிலையத்தில் வைத்து யாகம் வளர்த்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தான் பெரியாரிஸ். இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இப்படியொரு கொடுமை நடந்திருக்காது.
இந்த ஆட்சியே ஜோசியம், யாகம்னு தான் நடக்கிறது. முதல்வர் எந்த ஊருக்கு போனாலும், எந்த மாநிலத்திற்கு போனாலும் அங்க முதலில் அவர் போவது கோயிலுக்கு தான். அதன்பின் தான் மற்ற வேலைகள் நடக்கும். நாம் அனைவரும் போலி சாமியாரை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு போலி பெரியாரிஸ்ட்டை பார்த்திருக்கிறீர்களா? ஒரு போலி முதல்வரை பார்த்திருக்கிறீர்களா?
இங்கு இருக்கும் கூட்டம் அப்படியானது கிடையாது. பகுத்தறிவு, சுயமரியாதை, மூடநம்பிக்கை எதிர்ப்பு என்று பெரியாரின் அனைத்து கொள்கைகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு பெரியாரிஸ்ட்டுகள் என்று தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய்யை கொள்கை ரீதியாகவும் திமுக அட்டாக் செய்ய தொடங்கி இருப்பது கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
