திரை தீப்பிடிக்க.. காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பில்.. சந்தித்து கொண்ட ரஜினி - அஜித்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பின் 2வது நாள் நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்று தம்பதியினரை வாழ்த்தி உள்ளார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் அஜித் குமார் சில நிமிடங்கள் உரையாடினார். இருவரும் உற்சாகமாக உரையாடிய புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் டிரெண்ட் அடித்துள்ளது.

சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் 2வது நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் நாள் திருமண வரவேற்பில் அரசியல் தலைவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Rajinikanth and Ajith Kumar

தற்போது 2வது நாள் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்றை போலவே இன்றும் நடிகர் ரஜினிகாந்த் முன் நின்று அனைவரையும் வரவேற்று வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அனிருத் மற்றும் காவ்யா மாறனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் அஜித் குமார் அங்கிருந்த ரஜினிகாந்தை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். அதன் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அஜித் குமார் நடித்து வரும் டேர்டெவில் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே அஜித் குமாருடன் வேதாளம், விவேகம், விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் அனிருத் பணியாற்றி இருக்கிறார்.

திரைத்துறையில் இருந்து அஜித் குமார் மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், நடிகர் சிலம்பரசன், பிரதீப் ரங்கநாதன், அஷ்வத் மாரிமுத்து, இயக்குநர் ஷங்கர், நடிகை சிம்ரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+