பள்ளி கல்வித்துறையில் அதிரடி ஆக்ஷன்..3 வருடத்துக்கும் மேல் பணியாற்றுபவர்களுக்கு கட்டாய டிரான்ஸ்ஃபர்
சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட இருக்கின்றன. ஜூன் 30-ம் தேதியுடன் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை கட்டாய மாறுதல் செய்ய வேண்டும் எனவும், ஒரே அலுவலகத்தில் குருவி மாற்றம் செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசு அதிரடியாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள், அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நிகழாண்டு 'எமிஸ்' இணையதளம் மூலமாக நடத்தப்பட உள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் ஆக. 31 வரை மட்டுமே பொதுமாறுதல் வழங்கப்படும். நிா்வாக நலன், பதவி உயா்வு, நீண்டகால விடுப்புக்குப் பின் பணியில் சேருதல், தற்காலிக பணிநீக்க ரத்து ஆகிய காரணங்களுக்காக மட்டுமே மற்ற காலங்களில் மாறுதல் வழங்க வேண்டும்.
இதுதவிர ஜூன் 30-ஆம் தேதியுடன் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களை கட்டாயம் மாறுதல் செய்ய வேண்டும். ஒரே அலுவலகத்தில் பிரிவு மாற்றம் செய்யக்கூடாது. குரூப்- டி பணியாளா்கள், ஓட்டுநா்கள், ஆய்வக உதவியாளா்கள், 100 சதவீத பாா்வையற்றவா்கள் மற்றும் ஓய்வுபெற ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான காலம் உள்ளவா்களுக்கு கட்டாய மாறுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவா்கள், மனநலம் அல்லது உடல் சவால் கொண்ட குழந்தைகளின் பெற்றோா், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவா்கள், டயாலிசிஸ் பெறுபவா்கள், இதய அறுவைச் சிகிச்சை செய்தவா்கள், புற்றுநோய், மூளைக்கட்டி பாதிப்பு உள்ளவா்கள், ராணுவத்தினரின் வாழ்க்கைத்துணை, விதவைகள், 40 வயதுக்கு மேற்பட்ட தனிப் பெண்கள், விவாகரத்துப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்ப மாறுதல் கோர தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும். அதிகபட்சம் 3 இடங்களைத் தோ்வு செய்யலாம். 3 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களின் கட்டாய மாறுதலுக்குப் பிறகே விருப்ப மாறுதல் பரிசீலிக்கப்படும். வாழ்க்கைத் துணை முன்னுரிமைக்கு 30 கிமீ தொலைவு நிபந்தனை பொருந்தும். கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், பணிமூப்பு பட்டியல், காலிப் பணியிட விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், பதவி உயா்வுக்கான தகுதிப் பட்டியல் மாா்ச் 15-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, ஜூன் 30-க்குள் வெளியிடப்பட வேண்டும். பதவி உயா்வு மற்றும் பணிமாறுதல் ஆக. 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இளநிலை உதவியாளா் பணியிடங்களில் 20 சதவீதம், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றிய பதிவறை எழுத்தா் மற்றும் அலுவலக உதவியாளா்களைக் கொண்டு பணிமாறுதல் மூலம் நிரப்பப்படும்" எனக் கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
