அனிருத் ரிசப்ஷனில் சிம்பு- நயன்தாரா சந்திப்பு.. இயக்குனர் கொடுத்த ரியாக்ஷன்! வந்தாச்சு விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத் காவியா மாறன் வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று யாரெல்லாம் வந்தார்கள் என்று பார்த்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத சில சந்திப்புகளும் அங்கு நடைபெற்றது. அதில் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது சிம்பு - நயன்தாரா இருவரும் ஒரே இடத்தில் சந்தித்து, பேசிக்கொண்ட காட்சிகள் தான்.

Nayanthara Simbu Anirudh Kavya Maran

சிம்பு நயன்தாரா சந்திப்பு

அஜித் அவருடைய மனைவி ஷாலினியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏற்கனவே ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோல நயன்தாராவும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆனால் அங்கு சிம்புவும் வந்திருந்த நிலையில் மூன்று பேரும் நேரில் சந்தித்து சகஜமாக பேசிக் கொண்டது இந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிம்பு நயன்தாரா இருவரையும் பற்றி வந்த கிசுகிசுப்பு ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் அவர்களுடைய தனித்தனி வாழ்க்கையை பார்த்து கிளம்பி விட்டனர். அதற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது குடும்ப வாழ்க்கையில் நயன்தாரா இருக்கிறார். சிம்புவும் தனது சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்க பல வருடங்களுக்கு பிறகு ஒரு பொது நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டால் ஒருவரை ஒருவர் பார்த்து முகத்தை திருப்பி கொண்டு செல்லாமல் பேசிக் கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Nayanthara Simbu Anirudh Kavya Maran

ரசிகர்களின் விவாதம்

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த இயக்குனர் நெல்சன், "இங்கே என்ன நடக்குது" என்று பார்ப்பது போல ஒரு ரியாக்ஷன் கொடுத்ததும் ரசிகர்களுக்கு இன்னொரு கண்டன்ட் கிடைத்துவிட்டது. அந்த ரியாக்ஷனை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இதில் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும் ஒரு காலத்தில் பழகியவர்கள் பிரிந்து விட்டால் அதற்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்த்தாலோ, பேசக்கூடாது என்று இல்லை. வாழ்நாள் முழுவதும் எதிரிகளாக இருக்க வேண்டுமா? என்று ட்ரோல்களுக்கு ரசிகர்களே பதிலடி கொடுக்கிறார்கள்.

Nayanthara Simbu Anirudh Kavya Maran

ட்ரோல்களுக்கு பதில்

நயன்தாரா சிம்பு இருவருமே தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்கள். பழைய விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் போது சங்கடப்படுவதை விட, இயல்பாக பேசிக் கொள்வது நல்லது தானே? இதை பார்த்து ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. மாறாக பிரிந்த பிறகு ஒருவருடன் இயல்பாக பேச முடிகிறது என்றால் அதுவும் ஒரு முதிர்ச்சி தான். ஆனால் நம்ம ரசிகர்களுக்கு மட்டும் பழைய கதைகள் எல்லாம் சும்மா விட மனசு வராது. ஒரு சில நிமிடங்கள் பேசினால் கூட அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று இணையத்தில் கலாய்க்க தொடங்கி விடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+