குட்டையை குழப்பும் காங்கிரஸ்! உ.பி சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சு வார்த்தை!
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ் இணைந்து களம் இறங்க இருக்கின்றன. ஆனால், இன்னும் தொகுதி பங்கீடு முடிக்கப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் இன்று இது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
உ.பி-யை பொறுத்தவரை மொத்தம் 403 தொகுதிகள் இருக்கின்றன. இதில், சமாஜ்வாதி எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறது? காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் வெற்றி விகிதம்
கடந்த காலங்களில் காங்கிரஸ் அவ்வளவு சிறப்பாக ஒன்றும் செயல்பட்டிருக்கவில்லை. குறிப்பாக 1989க்கு பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்து. 2022 சட்டமன்ற தேர்தலில் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது மக்களவை தேர்தல்களிலும் இதே நிலைமைதான்.
2014ல் - 2 தொகுதிகள்
2019ல் - 1 தொகுதி
2024ல் - 6 தொகுதிகள் - அதுவும் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து
181 தொகுதிகள்
இதுதான் காங்கிரஸின் நிலவரம். இப்படி இருக்கையில் தற்போது 2027 சட்டமன்ற தேர்தலை சமாஜ்வாதியுடன் சேர்ந்து எதிர்கொள்ள காங்கிரஸ் ரெடியாகி வருகிறது. எல்லாம் ஓகேதான். ஆனால், காங்கிரஸ் கேட்கும் இடங்கள்தான் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறது. 181 தொகுதிகளை கேட்பதாக அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார்.
பாஜகவுக்கு வாய்ப்பை கொடுத்த காங்கிரஸ்
இவ்வளவு தொகுதிகளை எல்லம் நிச்சயம் காங்கிரஸால் ஜெயிக்க முடியாது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், இத்தனை தொகுதிகளில் அவர்களுக்கு பூத் லெவலில் ஆட்கள் கூட இல்லை. இதெல்லாம் தெரிந்தும் எப்படி ராகுல் காந்தியால் இவ்வளவு தொகுதிகளை கேட்க முடிகிறது? என்பது கேள்வியாக இருக்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைமைதான். அழாத குறையாக அடம்பிடித்து 61 தொகுதிகளை கேட்டு வாங்கியது காங்கிரஸ். ஆனால் கடைசியில் 6 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது.
காங்கிரஸ் தோல்வியடைந்த 55 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமானதாக மாறி.. பீகாரில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைந்தது.
முதல்கட்ட பேச்சுவார்த்தை
இப்படி இருக்கையில் உ.பியில் 181 தொகுதிகளை ராகுல் காந்தி மனசாட்சியே இல்லாமல் கேட்டு வருகிறார். தொகுதி பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரியின் வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 2 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் சொதப்பினாலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை வென்றிருக்கிறது. இதை வைத்துதான் பேரம் பேச கட்சி ரெடியாகி வருகிறது.
சமாஜ்வாதியின் பிளான்
காங்கிரஸ் கேட்கும் இடங்களை அப்படியே தூக்கி கொடுத்தால் அது பாஜகவுக்கு சாதகமானதாக மாறிவிடும். மறுபுறம் அவர்கள் கேட்கும் இடங்களை கொடுக்கவில்லை எனில், தேர்தல் நேரத்தில் சரியான ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே சமாஜ்வாதி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
