சுருள் வாள், தமிழ் வசனம், ரத்தம் தெறிக்கும் சண்டை.. GTA 6க்கு இணையாக ரெடியாகும் Son of Thanjai

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெலியான GTA 6 கேமை உலகமே கொண்டாடி தீர்த்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க சத்தமே இல்லாமல் தஞ்சை சோழர்களின் பெருமையை பேசும் ஒரு கேம் உருவாகி வருவது உங்களுக்கு தெரியுமா? அதுவும் நம்ம சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனமே இதை உருவாக்கி வருகிறது.

உலகம் முழுவதும் கேமர்கள் எதிர்பார்த்த GTA 6 வெளியாகி மிக பெரியளவில் ஹிட் அடித்துள்ளது. ஆனால், இதே நேரத்தில் தமிழர் கேமர்கல் கவனிக்க வேண்டிய மற்றொரு பிரம்மாண்டமான கேம் தயாராகி வருகிறது. 11ம் நூற்றாண்டு தென்னிந்தியாவை, குறிப்பாக சோழர்களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கேம் குறித்து நாம் பார்க்கலாம்.

video game offbeat

சோழ இளவரசனின் பயணம்!

11ம் நூற்றாண்டு தென்னிந்தியாவின் வரலாற்று பின்னணியில் Son of Thanjai கேம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையான வரலாறு இல்லை. இந்த கேமிற்காக சோழ பரம்பரையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கற்பனை கதையாகும். இதில் விண்ணேந்திர சோழன் என்ற இளவரசனாக நாம் விளையாட வேண்டும். அரண்மனையில் வளர்ந்த இந்த இளவரசன், தனது அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறான்.

அதன்பிறகு விவசாயிகள், வணிகர்கள், கிளர்ச்சியாளர்கள், உளவாளிகள் என பலருடன் பழகி சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இளவரசனின் நோக்கம் இழந்த அரியணையை மீண்டும் கைப்பற்றுவது மட்டுமல்ல. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆட்சி செய்ய தகுதியானவன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அடிப்படையாக கொண்ட இந்த கேமில் சுமார் 8 சதுர கிமீ பரப்பளவிலான ஓபன் வொல்ட் செட் அப்பில் நடக்கிறது. கோயில் நகரங்கள், நெல்வயல்கள், சந்தைகள், காடுகள் என பல இடங்களை வீரர்கள் சுற்றி பார்க்கலாம். நடந்து செல்வது மட்டுமின்றி குதிரை, யானைகளிலும் பயணிக்க முடியும்.

மதன் கார்க்கி

இந்த Son of Thanjai கேமின் மிக முக்கியமான அம்சமே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் தான். மதன் கார்க்கி 2025ம் ஆண்டின் இறுதியில் இந்த டீம் உடன் இணைந்தார். ஒரு சில பாடல்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கேமின் கதை மற்றும் வசனங்களை எழுதும் முதன்மை எழுத்தாளராக கார்கி பொறுப்பேற்றுள்ளார்.

இந்த கேமின் வசனங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ் வெர்ஷனில் 11ம் நூற்றாண்டு தஞ்சாவூர் பகுதியை நினைவூட்டும் உள்ளூர் வட்டார வழக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தென்னிந்திய பாரம்பரிய இசைக்கருவிகள், தெருக்கூத்து நிகழ்ச்சிகள் ஆகியவையும் கேமில் இடம்பெறுகின்றன. தமிழ் கலாச்சாரத்தை வெறும் பின்னணியாகக் காட்டாமல், கேமின் அனுபவத்திலேயே முக்கியமான பகுதியாக மாற்றியுள்ளனர்.

சுருள் வாள்

வழக்கமான ஆக்‌ஷன் கேம்களில் பெரும்பாலும் வாள், கத்தி அல்லது துப்பாக்கி ஆகிய ஆயுதங்களே இடம்பெறும். ஆனால், இந்த கேமில் தென்னிந்தியாவின் பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் தற்காப்பு உள்ளன. அதில் சுருள் வாள் முக்கியமானது. இதுவே பிரதான ஆயுதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தோடு அருவாள், சிலம்பம், வலரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளுடன் சண்டையிடலாம். இவை இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தற்காப்பு கலை நிபுணர்களை பயன்படுத்தி மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்திலும் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாறுவேடம் அணிவது, கூட்டத்துடன் கலந்து மறைந்து கொள்வது, எதிரிகளை உளவியல் ரீதியாக அச்சுறுத்துவது என பல நுட்பங்கள் கேமில் இருக்கிறதாம். உதாரணமாக சண்டையில் எதிரி படையின் தளபதியை வீழ்த்தினால், மற்ற வீரர்களின் அஞ்சுவது போன்ற செட்அப் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

கடந்தாண்டு இந்த கேமின் முதல் டீசர் வெளியானது. இது கவனம் பெற்றாலும் அதில் உள்ள குறைகளை பலரும் குறிப்பிட்டனர். டெவலபர்களை அதை கேட்டு கேமை மேலும் மேம்படுத்தினர். தொடர்ந்து 2026 ஜூன் மாதம் சுமார் 3 நிமிட கேம்ப்ளே வீடியோ வெளியானது. அது கேமர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கேமின் கிராபிக்ஸ், வித்தியாசமான வரலாற்று பின்னணி, தமிழ் குரல், பாரம்பரிய ஆயுதங்கள் என பல விஷயங்கள் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, சுருள் வாளை கொண்டு சண்டையிடும் காட்சிகள் கேம்ப்ளே வீடியோவின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தன. ரத்தம் சொட்ட சொட்ட அந்த கேம் வீடியோ காட்சிகள் கேமர்கள் மத்தியில் ஹிட் அடித்தது என்ரே சொல்லலாம்.

எப்போது வெளியாகும்?

இந்த கேம் எப்போது வெளியாகும் என்பது துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும், அடுத்தாண்டு மார்ச் அல்லது மே மாதம் இந்த கேம் வெளியாகும் என தெரிகிறது. சோழர் காலப் பின்னணி, தமிழ் வசனங்கள், பாரம்பரிய ஆயுதங்கள், தென்னிந்திய கலாச்சாரத்தை மையமாக கொண்ட கதை என பல தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகும் Son of Thanjai நிச்சயம் இந்திய கேமிங் துறையில் ஒரு புயலை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+