திருப்பரங்குன்றம் தீபம்! நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திருமாவளவன் பேரணி! அனுமதி மறுத்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீப வழக்கில், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்கு எதிராக, இன்று மதுரையில் அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பங்கேற்க இருந்தார். ஆனால், தற்போது இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவா அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த இடைக்கால உத்தரவை எதிர்த்தும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான 'மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு' சார்பில் இன்று மதுரையில் ராஜா முத்தையா மண்டபத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Tiruparankundram Deepam Row

இதில் திருமாவளவன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருந்த நிலையில் தற்போது காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. அதேபோல மதுரை கிரைம் பிராஞ்ச் சந்திப்பில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் காரணமாகவே ஆர்ப்பாட்டங்கள், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஒருவேளை தடையை மீறி ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

நாளை கார்த்திகை தீப திருவிழா. உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் இந்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பில்லை. அதேபோல நாளைய தினம் நீதிமன்றம் விடுமுறை. புதன்கிழமைதான் மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

மறுபுறம் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தவெக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்த உத்தரவை அரசு எப்படி அணுக போகிறது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+