Gold Rate Today: அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1080 எகிறியது.. நகை பிரியர்கள் ஷாக்
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் 2 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் 3,605 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1080 உயர்ந்து இப்போது ரூ.92,800க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வந்தது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு மற்றும் ஏஐ நிறுவனங்களின் பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை காரணமாகவே தங்கம் விலை சரிந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்பாட் தங்கம் 3 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 3,514.08 டாலராக குறைந்தது. அமெரிக்காவில் டிசம்பர் மாத டெலிவரிக்கான கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலையும் 4.6 சதவீதம் சரிந்து 3,515.40 டாலராக வர்த்தகமானது. அதேநேரம் இன்றைய தினம் வர்த்தகம் ஆரம்பித்தது முதல் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் உயர்ந்தே வருகிறது. ஸ்பாட் தங்கம் 2.15% உயர்ந்து 3608 டலராக உள்ளது. டிசம்பர் மாத டெலிவகரிக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 2.5% உயர்ந்து 3605 டாலருக்கு வர்த்தகமானது.
அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பே தங்கம் விலை சரிய காரணமாக இருக்கிறது. விலைவாசி உயர்வு காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றே கருதுகிறார்கள். குறிப்பாக, பணவீக்க அபாயம் அதிகரித்தால் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டியிருக்கலாம் என்று பிலடெல்பியா பெடரல் ரிசர்வ் தலைவர் அன்னா பால்சன் எச்சரித்திருந்தார்.
அதாவது அடுத்த இரு மாதங்களுக்கு என பார்க்கும் போது டிசம்பரில் தங்கம் விலை சரியவே வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். டிசம்பர் முதல் வாரம் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெறும் நிலையில், அதில் 0.25% வட்டி விகிதம் உயரும் என்கிறார்கள். அப்படி உயரும் போது தங்கம் விலை விலை நிச்சயம் சரியும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை ரூ.1080 உயர்ந்து, ரூ.92,800க்கு விற்கப்படுகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,500க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.175க்கு விற்பனையாகிறது
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
22-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.92,800
21-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.91,720
20-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.92,080
19-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.95,840
18-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.97,720
17-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.99,760
16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,320
15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920
14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920


Click it and Unblock the Notifications
