நாளை திருக்கார்த்திகை தீபம்! 1000 மீட்டர் காடா துணி, கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: நாளை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக 1000 மீட்டர் காடா துணிக்கும், 310 கிலோ எடைக் கொண்ட கொப்பரைக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். இதையடுத்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி இன்று காலை 1000 மீட்டர் நீள காடா துணிக்கும், கொப்பரைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த கொப்பரையை பக்தர்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

spirituality tiruvannamalai

முன்னதாக கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து தினந்தோறும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெறும் வாகன உற்சவங்கள் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். குறிப்பாக நவம்பர் 19ஆம் தேதி ரிஷப வாகன உற்சவம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெள்ளி ரக உற்சவமும், நவம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை மகா ரதத் தேரோட்டமும் நடைபெற்றன.

spirituality tiruvannamalai

தேரோட்டத்தின் போது அண்ணாமலையார் பெரிய தேரில் எழுந்தருளி திருவண்ணாமலையின் மாட வீதிகளில் வலம் வந்தார். இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கல் அரோகரா, ஓம் நமச்சிவாய என கோஷமிட்டனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பரணி தீபம் நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படுகிறது. சிவபெருமான் ஜோதி வடிவில் இருக்கிறார் என்பதை நினைவுக்கூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

spirituality tiruvannamalai

கோயிலுக்குள் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து எடுக்கப்படும் திருவிளக்கின் ஒளி, மாலையில் நடைபெறும் மகா தீப நிகழ்வுடன் ஆன்மீக ரீதியாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பரணி தீபத்தைத் தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை மலை உச்சியில் பிரம்மாண்டமான கொப்பரையில், நெய், திரி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்படும். அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிடுவர். கார்த்திகை தீபத்திருவிழாவின் போதே பவுர்ணமியும் வருவதால் இந்த விழாவுக்கு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள்.

spirituality tiruvannamalai

மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஒளிரும். மகா தீபத்தைத் தொடர்ந்து புதன்கிழமை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. நவம்பர் 26ஆம் தேதி வியாழக்கிழமை சுவாமி, அம்பாள் கிரிவலம் நடைபெறுகிறது. வரும் 27ஆம் தேதி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. 28ஆம் தேதி விழாவின் நிறைவு நிகழ்வாக சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. இத்துடன் இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.
இன்று இரவு முதல் நாளை வரை பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+