இந்தியாவுக்கு ஆபத்து? வங்கதேசம் போன சீனாவின் 450 டன் கெமிக்கல்.. மோப்பம் பிடித்து தடுத்த இந்தோனேசியா

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: சீனாவில் இருந்து வங்கதேசம் நோக்கி சென்ற சரக்குக் கப்பலில் 405 டன் அளவுக்கு ஏவுகணைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் கெமிக்கல் மற்றும் லட்சக்கணக்கான பதிவு செய்யப்படாத சிம் கார்டுகளை இந்தோனேசிய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த கெமிக்கல்களை கொண்டு சுமார் 100 ஏவுகணைகள் வரை தயாரிக்க முடியும் என்று இந்தோனேசிய கடற்படை அதிகாரி கூறியுள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே வங்கதேசத்திற்கு சென்ற கப்பலில் பல டன் அளவுக்கு ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

China Missile Bangladesh Indonesia China

கப்பல்

வங்கதேசத்தின் 'தி பிசினஸ் ஸ்டாண்டர்டு' நாளிதழ் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. கொமோரோஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த எம்.வி. ஸ்டார் லைன்ஸ் என்ற கப்பல் சீனாவின் லியான்யுங்காங் துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த சூழலில் தான் நவம்பர் 7ஆம் தேதி வடக்கு சுமத்ராவின் பெலவான் கடற்பகுதியில் இந்தோனேசிய கடற்படை அந்த கப்பலை தடுத்து நிறுத்தியது.

இருப்பினும், மறுநாள், நவம்பர் 8ஆம் தேதி மோங்லா துறைமுகத்தை சென்றடைய வேண்டிய கப்பல், திடீரென பெலவான் கடற்பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றதாகக் கூறப்படுகிறது. கப்பலின் நகர்வுகளை வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் கடற்படையினர் அவர்களை ரேடியோ மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். இருப்பினும், பதில் கிடைக்காததால் சோதனை நடத்தினர். இந்த சூழலில் தான் அந்த கப்பலில் இருந்து பல டன் அளவுக்கு ஏவுகணை தயாரிக்கும் கெமிக்கல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது.

ஏவுகணை கெமிக்கல்

கப்பலில் இருந்த 36 கன்டெய்னர்களை சோதனையிட்டபோது, அதில் 15 கன்டெய்னர்களில் 405 டன் சோடியம் பெர்குளோரேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 54 பேலட்களில் லட்சக்கணக்கான 4G LTE சிம் கார்டுகளும் இருந்தன. சோடியம் பெர்குளோரேட் என்பது ஒரு சக்திவாய்ந்த oxidising agent. இது ராக்கெட்கள், ஏவுகணைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை தனியாக வெடிபொருளாக பயன்படுத்த முடியாது என்ற போதிலும், ஏவுகணைகளுக்கு மிக முக்கியமான பொருளாக இது பயன்படுகிறது. சீனாவில் இருந்து சென்ற இந்த கப்பலில் கைப்பற்றப்பட்ட கெமிக்கல் மூலமாக சுமார் 100 ஏவுகணைகளை தயாரிக்க முடியும் என இந்தோனேசியா கூறுகிறது.

வங்கதேசத்தை பொறுத்தவரை ராணுவ தளவாடங்கள், வெடிமருந்துகள், சிறிய ரக துப்பாக்கிகள் தயாரிக்க உள்நாட்டிலேயே அவர்களிடம் தொழில்நுட்பமும் உள்கட்டமைப்பும் உள்ளது. ஆனால், சோடியம் பெர்குளோரேட் பயன்படுத்தி ராக்கெட், ஏவுகணைகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பமும் சரி, கட்டமைப்பு சரி அவர்களிடம் இல்லை. அப்படியிருக்க இவ்வளவு பெரிய அளவிலான கெமிக்கல் ஏன் வங்கதேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

முரண்பாடுகள்

கப்பலின் ஆவணங்களிலும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த கப்பலுக்கு அக்டோபர் 2027 வரை லைசென்ஸ் இருப்பதாக சொல்லப்பட்டு இருந்தாலும் அந்த லைசென்ஸ் சஸ்பெண்ட் ஆகியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கப்பலின் உரிமையாளர்கள், சரக்கை அனுப்பிய நிறுவனம், வங்கதேசத்தில் அதை பெற வேண்டிய நிறுவனம் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இப்படி பல மர்மம் அந்த கப்பலை சுற்றி இருந்து வந்துள்ளது.

வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா துறைமுகம் வங்கதேசத்திற்கு எந்தளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு இந்தியாவுக்கும் முக்கியமானது. 2015, 2018 ஒப்பந்தங்களின்படி இந்தியா தனது வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்ல இந்த துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது. இதற்காகவே மோங்லா துறைமுகத்துடன் இணைக்கும் குல்னா - மோங்லா ரயில் பாதைக்கும் இந்தியா நிதியுதவி செய்துள்ளது.

காய் நகர்த்தும் சீனா

அதேநேரத்தில் இந்த பகுதியில் சீனாவும் தனது பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. 2026 ஜூன் மாதம், மோங்லா துறைமுகம் அருகே 110 ஏக்கரில் பொருளாதார மண்டலம் அமைக்க சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்துடன் வங்கதேசம் ஒப்பந்தம் செய்தது. அந்த இடம் முன்பு இந்தியாவுடன் உருவாக்கப்படவிருந்த பொருளாதார மண்டலத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அது சீனா வசம் சென்றது. மேலும், மோங்லா துறைமுக விரிவாக்கத்திற்காக சீனா சுமார் 336 மில்லியன் டாலர் கடனும் வழங்கியுள்ளது. இந்த சூழலில் தான் ராக்கெட் எரிபொருளும் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+