விருச்சிக ராசிக்கு சிக்கல்கள் நீங்கி செல்வாக்கு உயரும்.. நினைத்தது நடதக்கும் யோகம்.. 85% அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-viruchigam-people-from-nov-23-to-29

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. விருச்சிக ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். விருச்சிகம் என்பது செவ்வாய் வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தலைவலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் வீண் வாதம் செய்வது, தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது.

சிக்கல் தீரும்

இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். தொழிலில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். செல்வாக்கு உயரும். தொழிலதிபர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவணங்கள், கோப்புகள், கணக்கு வழக்குகளில் அதீத கவனமாக கையாளுவது, பார்த்துக் கொள்வது நல்லது. சகலவித சங்கடங்களும் தீரும். எதிரிகள், மேலதிகாரிகள் விஷயத்தில் நிதானம், அடக்கம் அவசியம்.

பாதிப்பில்லை

வேலை இழப்பு, வேலை மாற்றம், வேலை பிடிக்காமல் இருப்பது, வேலை பார்க்கும் அலுவலகத்தில் சிலர் தவறாக நடந்து கொள்வது, வீண் பழி சுமத்தல் போன்றவை ஏற்படும். புரிதல் இல்லாத ஆட்களுடன் எப்படி இருப்பது என்ற நிலைமை ஏற்படும். மிகவும் நேர்மையான நபராக இருப்பீர்கள். சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

கவனம்

அடுத்த மாதம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கால் முட்டியில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. பணம் காசுகளை வெளியில் கொடுத்தால் மீண்டும் வராது. வேறு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. சந்தோஷமாக இருப்பீர்கள். விரயத்தில் இருக்கும் சுக்கிரன், புதன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

நினைத்தது நடக்கும்

எதிர்பார்க்காத பரிசு வெளியில் இருந்து வருவதற்கான வாய்ப்புள்ளது. திட்டமிட் காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நினைத்தது நடக்கும் யோகம் ஏற்படும். நீங்கள் செய்வதை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. எலும்புகளில் வலி வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தொழிலில் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய காலம் என்பதால் தொழில் செய்யும் இடங்கள், உத்தியோகம் செய்யும் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழிபாடு

பெருமாள், தாயார், அனுமன் வழிபாடு சிறந்த பரிகாரமாகும். சிவனுக்கு அபிஷேகம் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். கபாலீஸ்வரர் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+