முதுமலை வனப்பகுதியில் புலியையே விரட்டிச் சென்றதா "சிறுத்தை"? வன்னியரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு, புலியை துரத்தி ரீல்ஸ் போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முதுமலை வனப்பகுதியில் புலியையே விரட்டிச் சென்றதா சிறுத்தை? - சமூகநீதிப் போராளிகளையும் விட்டுவைக்காத தற்குறிகளின் Reels மோகம்!

முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

vanni arasu

வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் வன்னியரசு, வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப் பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் வன்னியரசு மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த 10 ஆம் தேதி சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதுகலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கு தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று அவர் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த ரீல்ஸ் நேற்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் புலியை விரட்டி செல்லும் காட்சியும் அந்த ரீல்ஸில் இடம் பெற்றுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடந்து சென்று ரீல்ஸ் எடுக்க அமைச்சருக்கு வனத்துறை எவ்வாறு அனுமதி கொடுத்தது என விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+