முதல்வர் விஜய் மனைவி சங்கீதா பக்கத்தில் நின்ற பெண் யார் தெரியுதா? அரசியல் குடும்ப வாரிசு தான்!
சென்னை: அனிருத்- காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி 2 நாட்களாக சோசியல் மீடியாவில் களைகட்டி கொண்டு இருக்கிறது. இதில் சினிமா, அரசியல், விளையாட்டுத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தோனி முதல் அஜித் வரை என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களாக நடந்த வரவேற்பில் முதல் நாள் முதல்வர் விஜய் தனியாக கலந்து கொண்டார். அவரை தொடர்ந்து அவருடைய மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார். ஆனால் சங்கீதா பக்கத்தில் நின்ற பெண் யார் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

கலைஞர் வீட்டு வாரிசு
இப்போதான் அந்த சந்தேகத்திற்கு விடை கிடைத்திருக்கிறது. முதலில் அந்த பெண்ணை பார்த்ததும் இவர் நடிகையா? என்ற கேள்வி பலருக்கு வந்திருக்கிறது. அதிலும் ஒரு சிலருக்கு இவர் நடிகை நதியா மாதிரி இருக்கிறாரே? அவரின் சொந்தக்காரரா என்று கூட சோஷியல் மீடியாவில் விவாதித்து வந்தனர். ஆனால் அந்தப் பெண் வேறு யாரும் இல்லை கலைஞர் கருணாநிதியின் பேத்தி தான். இவர் அதிகமாக சோசியல் மீடியாவில் இல்லாததால் இவரை பற்றி பெரிதாக பலருக்கும் தெரியவில்லை. மு.க ஸ்டாலினின் சகோதரி மகள் தான்.
கருணாநிதியின் மகள் மூக செல்வியின் வாரிசு தான் அந்த பெண். அவருடைய பெயர் எழிலரசி. 20 வருஷங்களுக்கு மேலாக டாக்டராக இருக்கும் அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நண்பர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதாவோடு இவருக்கு நட்பு இருக்கிறதாம். அவருக்காக தான் சங்கீதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று கூட கூறப்படுகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
முதல்வர் விஜய் மாப்பிள்ளை வீட்டு சார்பாக கலந்து கொண்டதாகவும், அவருடைய மனைவி சங்கீதா பெண் வீட்டு சார்பாக கலந்து கொண்டதாகவும் கூட கூறப்படுகிறது. ஏற்கனவே அனிருத் ரிசப்ஷனுக்கு முன்பே, முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? அப்படி கலந்து கொண்டால் அவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா? அதுபோல மாப்பிள்ளை வீட்டு சார்பாக வரும் ரஜினிகாந்திடமும் பேசுவாரா? என்றெல்லாம் பலரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

வைரலான போட்டோஸ்
ஆனால் மாலை வேலையில் முதல்வர் விஜய் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிலும் ஒரே பிரேமில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் என மூன்று பேரும் இருந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அரசியலில் நாங்கள் என்னதான் ஒருவரை மாற்றி ஒருவர் பேசிக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் நேரில் பார்க்கும் போது அரசியலை புகுத்த கூடாது என்று சொல்வது போல அந்த போட்டோ இருந்தது. ஆனால் சோசியல் மீடியாவில் அந்த போட்டோவையும் தாண்டி சங்கீதாவின் போட்டோவை தான் பலரும் தோண்டி துலாவி வந்தனர். சங்கீதா பக்கத்தில் யார் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இப்போ அது பற்றிய தேடலுக்கு பதில் கிடைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
